மனோவின் மகன்கள் எங்கே? திணறும் போலீஸ்! அல்லாடும் அம்மா! அதிர்ச்சியில் அப்பா!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் மனோவின் இரு மகன்களும், 16 வயது சிறுவன் உள்பட இருவரை தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் இன்று மூன்றாவது நாளாக தேடப்பட்டு வருகிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை.
சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் ஆகியோர் முட்டி போட வைத்து உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக புகார் எழுந்தது.

இந்த தாக்குதல் குறித்து மனோவின் மகன்களுக்கு எதிரான வீடியோ ஆதாரம் வேறு கிடைத்துள்ளது. இதையடுத்து ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆனால் மனோவின் இரு மகன்கள் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர்கள் ஈசிஆரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன் தினம் முதல் அவர்களை தேடி வருகிறார்கள். அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனினும் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீஸார் தேட முயற்சித்து வருகிறார்கள்.
அவர்களது செல்போன் சிக்னல் மாறி மாறி காட்டி வருவதால் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த வகையில் இன்று 3ஆவது நாளாக அவர்களை தேடி வருகிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் தங்களது மகன்கள் தலைமறைவாக இல்லை என மனோவின் மனைவி ஜமீலா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து பாடகர் மனோவின் மனைவி ஜமீலா செய்தியாளர்களிடம் கூறுகையில், என் வீட்டுக்காரர் மனோ இந்த சினிமா துறையில் 40 ஆண்டுகளாக எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் சென்னையில் 39 ஆண்டுகளாக எப்படி வாழ்ந்து வருகிறோம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அப்படிப்பட்ட நிலையில் என் மகன்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை தொலைகாட்சிகளில் எப்படி காட்டுகிறார்கள். எப்படி பேசுகிறார்கள் என்பது எங்களுக்கு புரியவே இல்லை. இந்த சம்பவத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. "அந்த பசங்கள் மேல போலீஸ் கேஸ் கொடுக்கலாம்" என என் மகன்கள் நேற்று இரவே சொன்னார்கள்.
நான்தான் , "அப்பா ஊரில் இல்லை. சின்ன பசங்க போகட்டும்" என்றேன். நானும் ஒரு தாய்தான். பசங்க குறித்து எனக்கு தெரியும். அவர்கள் சிறைக்கு சென்றால் அவர்களுடைய வாழ்க்கை என்னவாகும் என்பதும் எனக்கு தெரியும். அதனால் அந்த பசங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம் என்றேன்.
ஆனால் என் மகன்களை நன்றாக திட்டிவிட்டேன். அந்த கோபத்தில் எனக்கு மயக்கமாக இருந்ததால் நான் அறைக்கு சென்று படுத்துவிட்டேன். காலையில் என் மகன்கள் வீட்டில் இல்லாததால் வீட்டு வேலை செய்வோரிடம் கேட்ட போது அவர்கள் இருவரும் "மருத்துவமனைக்கு செல்வதாக சொன்னார்கள்" என்றனர்.
அதன் பிறகு அவர்களுடைய செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்கள். அதற்குள் நியூஸில் என் மகன்கள் குறித்து என்னென்னவோ செய்தி போட்டுவிட்டார்கள். இதனால் என் மகன்கள் பயந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. நானே அந்த கவலையில் இருக்கிறேன். என்னையும் என் மகன்களையும் தாக்கினார்கள் என ஜமீலா அழுது கொண்டே கூறினார்.












Click it and Unblock the Notifications