நடிகர் கிருஷ்ணா 2020ல் codewordல் பேசியது அம்பலம்! 22 மணி நேர விசாரணையில் அல்வா போல் சிக்கிய மேட்டர்
சென்னை: போதை பொருள் விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்- நடிகர் கிருஷ்ணாவின் பணபரிவர்த்தனை ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனராம். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
நடிகர் கிருஷ்ணா போதை பொருளை பயன்படுத்தவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவர் யாருக்காவது வாங்கி விற்றாரா என்பது குறித்தும் போலீஸார் அவரிடம் இன்றும் விசாரணை நடத்தினர். அங்கு போதை பொருள் ஏதும் சிக்கவில்லை.

ஆயினும், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்-நடிகர் கிருஷ்ணாவின் பண பரிவர்த்தனை ஆவணங்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. முதலில் பிரசாத் யாரென தனக்கு தெரியாது என கிருஷ்ணா தெரிவித்திருந்தார். அதாவது ஸ்ரீகாந்த் மட்டும்தான் எனக்கு தெரியும். போதை பொருள் கும்பல் யாரையும் தெரியாது என வாக்குமூலம் அளித்திருந்தார்.
மேலும் பிரசாத் குறித்து போலீஸார் கேட்ட போது, அவரை ஸ்ரீகாந்த் மூலமாக எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு என் நண்பரிடம் இருந்து ரூ 20 லட்சம் பணம் வாங்கிக் கொடுத்தேன். அதை பிரசாத் தராமல் ஏமாற்றியதால் அவருடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டேன் என கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு போதை பொருளை வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படும் பிரசாத்துடன் பணபரிவர்த்தனைகள் எதற்கானது, போதை பொருளுக்காக கொடுக்கப்பட்டதா என போலீஸார் விசாரணை செய்தனர்.
இவரிடம் 22 மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வெப் சீரிஸ் வெளியீடு தொடர்பாக பண பரிவர்த்தனை செய்ததாக கிருஷ்ணா தெரிவித்தார்.
இதையடுத்து கிருஷ்ணாவின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கையும், சமூகவலைதள கணக்குகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் "code word"ல் நடிகர் கிருஷ்ணா தகவல்களை பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்தது. அந்த கோடுவேர்டுக்கான அர்த்தம் என்ன என கேட்டுள்ளனர். மேலும் அந்த நண்பர்களுக்கே போன் செய்து எத்தனை நாட்கள் கிருஷ்ணாவுடன் பழக்கம் என கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
