வந்த வேகத்தில் அதிரடி காட்டிய புதிய கமிஷனர் ரத்தோர்.. சென்னை போலீசாருக்கு பறந்த உத்தரவு
சென்னை: சென்னை காவல் ஆணையராக கடந்த சில தினங்ளுக்கு முன்பாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். தற்போது சென்னை காவலர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை ரத்தோர் பிறப்பித்துள்ளார். அது குறித்த விவரத்தை பார்ப்போம்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, இதனால் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார். டெல்லியை சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியில் உள்ள டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் பள்ளியில் எம்ஏ ஜியோகிராபி படித்தார். மேலும் எம்பில் படிப்பையும் முடித்துள்ளார்.

மேலும் இவர் 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் சென்னை ஆவடியின் முதல் காவல் ஆணையராக செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த மாதம் டிஜிபி அந்தஸ்து பெற்று டிரெய்னிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31 ஆண்டுகளாக ஐபிஎஸ்ஸாக பணியாற்றி வரும் நிலையில் பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார். சென்னையின் புதிய காவல் ஆணையராக ரத்தோர் பதவியேற்றதுமே பல்வேறு அதிரடிகளை நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
காவல் ஆணையராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்தீப் ரத்தோர், சென்னை மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றி. எனக்கு முன்பு இப்பணியில் இருந்த ஆணையர்களின் நல்ல பணிகள் தொடர பாடுபடுவேன். மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் முன்னுரிமையாக இருக்கும். இப்பணிக்கு சென்னை மக்கள் தங்களின் முழு ஆதரவை அளிக்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், சென்னை காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை சந்தீப் ரத்தோர் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் (DGP/HoPF) மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் (COP/GCP) ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர். இதை வலியுறுத்தி, இன்றும் (03.07.2023) ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும் இக்கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சட்டம் & ஒழுங்கு. பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை பணியை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவல் ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரிசெய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது என்பதால் இச்சமயங்களில், செல்போனை பயன்படுத்துவது காவல் ஆளிநர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.
எனவே, போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது எனவும் காவல் ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளிநர்கள் செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணைஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் ஆகியோர் அவரவர்களின் கீழ் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்த வித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும், இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளிலும் ஒட்டியும், தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின்போது இதை படித்துக் காட்டியும், இந்த அறிவுரையைக் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த ஆணையாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications