கூடுவாஞ்சேரி பெண் கொலையில் திடுக்! கர்ப்பிணி நிஷாவை கூறு போட்டு வினிகர் ஊற்றி.. கொடூர தம்பதி!
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் போட்டு அவரது மாமிசத்தை சமைத்த கொடூர சம்பவத்தில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்பவர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாணிக் லஸ்கர், அவரது மனைவி ஒடிஸாவை சேர்ந்த பகபதி மாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் மாணிக் லஸ்கர், மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனால் ஏ.கே.47 துப்பாக்கியுடன் அவர் பதுங்கியிருந்த பகுதிக்கு சென்றனர். அப்போது போலீஸாரை பார்த்ததும் மாணிக் லஸ்கர் தப்பியோடினாராம். இதையடுத்து அவரை போலீஸார் துரத்தி பிடித்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரிலே பகபதி மாஜியும் கைது செய்யப்பட்டார். ஹயாதுன் நிஷா கொலை குறித்து மாணிக் லஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தில், நிஷாவுக்கும் மாணிக்கிற்கும் தகாத உறவு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில் நிஷா கர்ப்பமான நிலையில் அவர் மாணிக்கிடம் போய் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டாராம். அதற்கு மாணிக், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இருப்பதால், திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்தாராம். இதனால் கோபமடைந்த ஹயாதுல் நிஷா, மாணிக்கையும் பகபதியையும் மிரட்டினாராம்.
இதனால் நிஷாவை எப்படி கொலை செய்வது அவரது உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்பதை யூடியூப் வீடியோ பார்த்து கற்று கொண்டு அதை அப்படியே செயல்படுத்தினராம்.
அதாவது சடலத்தை கூறு போட்டதும் அதில் இருந்து துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக அந்த துண்டாக்கப்பட்ட நர மாமிசத்தில் வினிகரை ஊற்றி சமைக்க முற்பட்டனராம்.
இதனிடையே இந்த கொலை குறித்தும் தாங்கள்தான் சூட்கேஸை ரயிலில் வைத்தது என்பது குறித்தும் போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் வெட்டி கூறு போட்டப்பட்ட நிஷாவின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தாமல், பிரியாணி அண்டாவில் காய்கறிகள், அரிசி சேர்த்து சமைத்தனராம். அது போல் சூட்கேஸில் சில உடல் பாகங்களை வைத்து எப்படி என்பது குறித்து நடித்து காட்ட இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications
