ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணையில் ‘ட்விஸ்ட்’.. தனிப்படை போலீசார் ஒருவர் விடாமல் ‘துருவும்’ உயரதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீசார் அனைவரிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பெற்ற உதவி ஆணையர் முதல் காவலர்கள் வரை அனைவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். வேறு யாரையும் மிரட்டி பணம் பறித்துள்ளனரா? எனவும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Armstrong

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அகில் குமார் உக்கம் ராஜ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில், "கடந்த 2024ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனிப்படையில், தற்போது மவுண்ட் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளர் புகாரி பணியாற்றி வந்தார்.

அந்த வழக்கின் விசாரணையின்போது எனது செல்போன் எண், வழக்கில் தொடர்புடைய ஒருவரின் தொடர்பு பட்டியலில் இருந்ததாகக் கூறி என்னையும் கொலைவழக்கில் குற்றவாளியாக சேர்த்து விடுவதாக ஆய்வாளர் என்னை மிரட்டினார்.

ஆனால், நான் பயன்படுத்திய செல்போன் எண்ணை கடந்த 2018ஆம் ஆண்டு மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தனது நண்பருக்கு பயன்படுத்துவதற்காக வழங்கியிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்குடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லாத நிலையிலும் அந்த எண்ணை காரணம் காட்டி காவல் ஆய்வாளர் புகாரி தொடர்ந்து என்னை மிரட்டி வந்தார்.

வழக்கில் பெயர் சேர்க்காமல் இருக்க ஆரம்பத்தில் ரூ. 20 லட்சம் கேட்டார். பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பல்வேறு தவணைகளில் ரூ.40 லட்சத்துக்கும் மேல் பணத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் அண்மையில் மீண்டும் எனது வீட்டுக்கு வந்த ஆய்வாளர் புகாரி, மேலும் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக எச்சரித்தார்.

இதையடுத்து எழும்பூர் பகுதிக்கு வரவைத்து அங்கு தலைமை காவலர் சீனிவாசனின் இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு கூறி, ரூ. 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமின்றி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் எனக்கு சொந்தமான சுமார் 600 சதுர அடி நிலத்தை ஆய்வாளர் புகாரியின் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர்ந்து பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாகவும் மிரட்டி வருகிறார்." எனத் தெரிவித்திருந்தார்.

புகாருடன், அது தொடர்பான ஆடியோ, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களையும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில் குமார் உக்கம் ராஜ் இணைத்து வழங்கினார். அந்த புகாரின் பேரில் துணை காவல் ஆணையர் கோபி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் புகாரி திங்கட்கிழமை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிக்க வைப்பதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பெற்றது போல வேறு யாரும் மிரட்டப்பட்டுள்ளனரா என தனிப்படை போலீசார் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+