Vijay: விஜய் பட்டினம்பாக்கம் இல்லத்திற்குள் நுழைந்ததுமே! உள்ளே போன 3 போலீஸார்! என்ன காரணம்?
சென்னை: தவெக தலைவர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்றுள்ள நிலையில் அங்கு தற்போது 3 போலீஸார் சென்றுள்ளனர். அவர்கள் விஜய்யிடம் விசாரணை நடத்த செல்கிறார்களா, இல்லை பாதுகாப்பு பணிக்காக செல்கிறார்களா என்ற கேள்விக்கான விடை தெரிந்துவிட்டது.
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் 35 மணி நேரம் கழித்து விஜய் தற்போது வெளியே வந்துள்ளார். அவர் நீலாங்கரை வீட்டிலிருந்து நேராக பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு கரூர் சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் இல்லத்தில் எதிரே உள்ள பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து 3 போலீஸார் அவரது வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் பட்டினம்பாக்கம் வீட்டிற்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு 15 ஆவது மாடியில் உள்ள வீட்டில் இருக்கிறார். விஜய் பட்டினம்பாக்கம் வந்துள்ளதால் யாரையாவது சந்திக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அவர் யாரையும் சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் பட்டினம்பாக்கம் இல்லத்தில் இருந்து இன்று மாலையே நீலாங்கரை வீட்டிற்கும் செல்கிறார் என்கிறார்கள்.
இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க போலீஸிடம் தவெக தரப்பு அனுமதி கேட்டு இதுவரை கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்வராக வேண்டும் என்பதற்காக விஜய், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கடந்த 13 ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். வொர்க் ப்ரம் ஹோம் போல், வீக் என்ட் பாலிடிக்ஸ் என விஜய்யை நிறைய பேர் விமர்சித்திருந்தனர். ஆனால் விஜய்யோ, திமுக அரசுக்கு ரெஸ்ட் கொடுக்கவே ஓய்வு நாளில் பிரச்சாரம் செய்கிறேன் என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.
அந்த வகையில் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் மாநில அரசு, மத்திய அரசை விமர்சித்து பேசி வந்தார். அது போல்தான் கடந்த வாரம் நாமக்கல்லில் பேச காலை 8.45 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் விஜய்யோ மிகவும் தாமதமாக கிளம்பி நாமக்கல்லுக்கு 2.30 மணிக்குத்தான் வந்தாராம்.
விஜய் முகத்தை பார்க்க காலை முதலே கூட்டம் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதே சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அங்கு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பகல் 12 மணிக்கு பேசுவதாக விஜய் கூறியிருந்த நிலையில் அவரோ இரவு 7.10 மணிக்குத்தான் வந்தாராம்.
அப்படி வந்தவர் அங்கிருந்த ஒரு பகுதியில் இருந்த மக்களை பார்த்து கையசைத்திருந்தால் அங்குள்ள மக்கள் கிளம்பி போயிருப்பார்களாம். ஆனால் அவரோ அப்படி செய்யாமல் ஷட்டரை மூடிவிட்டாராம். மேலும் சரியாக அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இங்கிருந்தே பேசுமாறு விஜய் தரப்புக்கு போலீஸார் அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை என்கிறார்கள்.
இதனால் அந்த பேருந்து, விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்ததால் ஏற்கெனவே வேறு இடங்களில் நின்றிருந்தவர்கள் விஜய் செல்லும் இடத்திற்கு சென்றால் அவரை பார்க்கலாம் என நினைத்து வந்தனர். மேலும் தத்தி தடுமாறி விஜய் பேசும் இடத்திற்கு வந்திருந்தாலும் அவர் விரைந்து பேருந்தின் மீது வரவில்லையாம். 10 நிமிடங்கள் அங்கேயே இருந்ததால், hype ஆல் கூட்டம் கூடியதாக தெரிகிறது.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த விபத்தில் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம்.. மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. ப்ளூ சட்டை மாறன் -
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
ஜனநாயகன் விஷயத்தில் நடந்தது இதுதான்! எல்லாமே வதந்தி! ஓபனாக உடைத்த ஜீ5 கௌஷிக் -
இத்தனை வருஷமாக காத்திருந்து நேரம் பார்த்து அவதூறு செய்றாங்க.. மனைவி சங்கீதாவை சூசகமாக சாடிய விஜய்! -
Vijay: பெரம்பூரில் "5 ஜோசப் விஜய்" போட்டி! அப்படியே ஓபிஎஸ்ஸுக்கு நடந்தது மாதிரியே! -
கரூர் கேஸில் என் மீது பழியை போட்டார்கள்.. ஜனநாயகனை முடக்கினார்கள்.. அப்படியே ஆக்ரோஷமான விஜய்! -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்! -
நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா? -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்.. நெல்லை பரப்புரைக்கு 51 நிபந்தனைகளுடன் அனுமதி - செங்கோட்டையன் -
விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன?











Click it and Unblock the Notifications