Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவலர்கள் லீவு கேட்டால் உடனே கொடுங்க.. குடிநீர் உணவு கட்டாயம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உரிய காரணத்தோடு காவல்துறையினர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்றைய தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உயரதிகாரிகள் கூறியுள்ளனர். 2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு பணிப்புரிந்து வந்துள்ளார்.

policemen ask for leave, give it immediately Water and food is mandatory DGP Shankar Jiwal

கடந்த சில நாட்களாகவே டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் உயரதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தேனியில் நேற்று நடைபெற்றது. அதில் டிஜிபி சங்கர் ஜிவால், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனையடுத்து மதுரை சரகத்திற்கு உட்பட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்த பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உரிய காரணத்தோடு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

policemen ask for leave, give it immediately Water and food is mandatory DGP Shankar Jiwal

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் இருந்தும் அதுவே அவரது மரணத்திற்கு காரணமாகி விட்டது என்றும் கூறப்படும் நிலையில் சங்கர் ஜிவால் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

டிஐஜி விஜயகுமாருக்கு கடந்த 6 மாத காலம் விடுமுறை கொடுக்கவில்லை என்றும் அவர் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தற்போது விடுமுறை கேட்டு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+