Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் ‘டபுள் டிஜிட்’.. பாஜக டார்கெட் 4.. அண்ணாமலை அதிரடிக்கு பின்னணி.. போட்டு உடைக்கும் எக்ஸ்பர்ட்!

அதிமுக கூட்டணியை விட்டு விலக அண்ணாமலை முடிவெடுத்தது ஏன் என்பது பற்றி விளக்குகிறார் ரவீந்திரன் துரைசாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு பூத் வாரியான ரிசல்ட் அனாலிசிஸ், 2019 தேர்தல் ரிசல்ட் ஆகிய இரண்டும் தான் அண்ணாமலையை அதிமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடுக்கத் தூண்டி இருக்கிறது என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நான் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது அரசியல் அரங்கில் பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது.

அதிமுக உடனான கூட்டணியை அண்ணாமலை உண்மையாகவே விரும்பவில்லையா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க அவ்வாறு பேசினாரா, அண்ணாமலையின் கணக்கு என்ன என்பது பற்றியெல்லாம் நம்முடன் அலசுகிறார் ரவீந்திரன் துரைசாமி.

பூத் வைஸ் ரிசல்ட்

பூத் வைஸ் ரிசல்ட்

ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், நிச்சயமான அண்ணாமலை அதிமுக உடனான கூட்டணியை விரும்பவில்லை. ஈரோடு கிழக்கு பூத் வாரியான அனாலிசிஸ், 2019 தேர்தல் ரிசல்ட்டும் தான் அண்ணாமலையை இந்த முடிவை எடுக்கத் தூண்டி இருக்கிறது. ஈரோடு கிழக்கில் இஸ்லாமிய சமூகத்தவர் அதிகமுள்ள வாக்குச்சாவடிகளில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்று ஒப்புக்கொள்ளலாம். பறையர், அருந்ததியர், செங்குந்த முதலியார், நாயுடு சமூகத்தவர் அதிகமுள்ள பூத்களில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் இல்லை. எனில், மோடி + எடப்பாடி பழனிசாமி சேர்ந்து நின்றால், கிறிஸ்தவர், இஸ்லாமியர் வாக்குகளும் வராது. எடப்பாடி பழனிசாமியின் சமூக நீதி சூறையாடலால் மற்ற சமூகத்தவர் வாக்குகளும் வராது. அப்படியென்றால் 2019 ரிசல்ட் தான் 2024லும் வரும்.

அண்ணாமலை - அரசியல் புள்ளி

அண்ணாமலை - அரசியல் புள்ளி

இது அண்ணாமலைக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கேசி கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை, அண்ணாமலை, வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் என ஒரு சாதி செல்வாக்கு இருக்கும்போது மற்ற சமூக மக்கள் நெகட்டிவாக திரளத்தானே செய்வார்கள். அண்ணாமலைக்கு என ஓர் இமேஜ் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தால் அதுவும் போய்விடுமே. அதனால், அண்ணாமலை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்துவிடக்கூடாது என்ற புள்ளியில் தான் அண்ணாமலை அரசியல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணி தொடரும் என ஒருபக்கம் சொல்லிக்கொண்டே, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டிலும் இருக்கிறார்.

இரட்டை இலக்க சீட்களில் பாஜக

இரட்டை இலக்க சீட்களில் பாஜக

அண்ணாமலை இன்று செய்யக்கூடிய அரசியல், மோடி, எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்து நிற்கக்கூடாது என்பதற்கான அரசியல். மோடிக்காகத்தான் அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். பாஜக + அதிமுக எதிர்ப்பு வாக்குகளை டிடிவி தினகரன் பிரித்ததால் தான் தேனியில் ஓபி ரவீந்திரநாத் ஜெயிக்க முடிந்தது. இந்த மைக்ரோ மெக்கானிசம் வானதி சீனிவாசனுக்கோ, நயினார் நாகேந்திரனுக்கோ வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அமித்ஷாவுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்? அரசியல் களத்தில் பாஜக தலைமையில், பாஜக இரட்டை இலக்க சீட்களில் போட்டியிட்டு ஓ.பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரிவேந்தர் + ஏ.சி.சண்முகம் என்ற கூட்டணியை அமைக்கவேண்டும். ஓபிஎஸ் அதிமுகவின் பலமான தலைவர் என்பதை நிறுவும் வகையில் அவருக்கும் இரட்டை இலக்கத்தில் சீட் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிமுக வாக்குகளைப் பெற முடியும்.

4 சீட்களில் பாஜக வெற்றி வாய்ப்பு

4 சீட்களில் பாஜக வெற்றி வாய்ப்பு

எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது மோடி எதிர்ப்பாளர்கள் வாக்குகள் தான். கட்டுச் சோத்துக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியது போல, அவர்களிடம் இருக்கும் பெரிய அளவிலான வாக்கு வங்கி என்பதே மோடி எதிர்ப்பு ஓட்டுதான். அந்த ஓட்டுகள் அனைத்தும் 2019ல் சென்றது போல திமுக + காங்கிரஸ் அணிக்குச் செல்லும். 2014ல் ஐந்தரை சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது. பாஜக ஒரு சீட் ஜெயித்திருக்கிறது. பாஜக கூட்டணி மொத்தமாக 3 சீட் ஜெயித்திருக்கிறது. 2019ல் 2.7 சதவீதம் ஓட்டுகளைத் தான் பெற்றிருக்கிறது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று 5 சதவீத ஓட்டுகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அண்ணாமலை. மீண்டும் தனியாக நின்றால் 8 சதவீத வாக்குக்கு பாஜகவை கொண்டு செல்வார். தேனி, கன்னியாகுமரி, தென்காசி ராமநாதபுரத்தில் ஜெயிக்கும் வாய்ப்பு அமையும். கொங்கு மண்டலத்திலும் எடப்பாடிக்கு சளைத்தவர் இல்லை அண்ணாமலை என்ற நிலைக்கு வருவார். அண்ணாமலையின் இந்த முடிவு மோடிக்கும், பாஜகவுக்கும் நல்லது.

காயின் ப்ளே

காயின் ப்ளே

திமுக கூட்டணி பாஜகவுக்கு எதிரான கூட்டணியாக வலுவாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் சீமான் வளர்ந்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாத ஈர்ப்பு சக்தி அவருக்கு இருப்பதை ஈரோடு கிழக்கு ரிசல்ட் நிரூபணம் செய்கிறது. ஈர்ப்பு சக்தி இல்லாததால் ஈபிஎஸ்ஸுக்கு 5 சதவீத வாக்குகள் குறைந்திருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியின் சமூக நீதி சூறையாடலால் பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் சீமானுக்கு ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் காலைவாரக்கூடியவர், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் அவர் என்ன செய்தார் என்று தெரியும். அப்படி இருக்கும்போது அண்ணாமலை இந்த காயினை வைத்து இப்படி ‘ப்ளே' செய்தால் தான் சரியாக வரும் என உணர்ந்துள்ளார் என ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+