ஸ்டாலின் முதல் விஜயபாஸ்கர் வரை.. நயன்தாரா To ஐஸ்வர்யா.. தந்தையர் தினத்தில் நெகிழ்ந்த பிரபலங்கள்.!
சென்னை: தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்களும், நயன்தாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
உலகெங்கும் இன்று தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அனைவருக்கும் அவர்கள் வாழ்க்கையில் முதல் ஹீரோ தந்தை தான்.

விரல் பிடித்து நடக்கச் செய்வதிலிருந்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவது வரை தந்தை ஒவ்வொருவருக்கும் ஹீரோவாகவும், நண்பனாகவும் திகழ்கிறார்கள். அப்பேர்ப்பட்ட தந்தையர் தினத்தில் இன்று பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தந்தையோடு தாங்கள் இருந்த அற்புத தருணத்தை புகைப்படமாக வெளியிட்டு நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி விஜயபாஸ்கர் வரை என பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகை நயன்தாரா தொடங்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை பல்வேறு பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றனர் அதன் தொகுப்பை பார்க்கலாம்..

"தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

"உழைப்பின் முழு உருவாகி குடும்பத்தின் சுமைகளை தனதாக்கி தன் பிள்ளைகளை அவையத்து
முந்தி இருக்கச் செய்யும் ஆற்றலுக்கு சொந்தக்காரர் #அப்பா எல்லாப் பிள்ளைகளுக்கும் முதல் நம்பிக்கையை, வலிமையை அன்போடு விதைக்கும் தந்தையர்கள் அனைவரின் தியாகத்தையும்
போற்றி வாழ்த்துகிறேன்!" என பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

நம்பிக்கை துரோகத்தினால் பட்ட எத்தனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை...! - ஓபி ரவீந்தரநாத்

தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால்..

என் தந்தையின் அன்பான நினைவாக, அவரது சிரிப்பு ஒவ்வொரு அறையையும் ஒளிரச் செய்தது, அவரது அன்பு ஒவ்வொரு தருணத்தையும் சிறப்புடையதாக்கியது. அவரை என்றென்றும் மிஸ் செய்கிறேன், எப்போதும் நேசிக்கிறேன். - சச்சின் டெண்டுல்கர்

அப்பா தான் முதல் ஹீரோ, ஒவ்வொரு குழந்தைக்கும்! அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார் பிரபல நடிகரான சிரஞ்சீவி

My heartbeat.. my all ...love you appa என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

தனது கணவர் விக்னேஷ் சிவன் தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா












Click it and Unblock the Notifications