Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்ல ED Raid; அடுத்து முதல்வர் பதவி! சர்ச்சையாகும் பாஜக ஃபார்முலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈடி ரெய்டுக்குப் பின்னர் பாஜகவில் இணைந்தவர்கள் எப்படி உள்ளார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் கார்டு போட்டு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்திய அளவில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது பற்றி விவாதம் நடந்து வருகிறது. அதில் பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற அணியாக ஈடி செயல்படுகிறது என்று சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்தளவுக்கு அமலாக்கத்துறை பாஜகவின் அடிமையாக மாறிவிட்டது என்பது எதிர்க் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு.

Political Leaders Joined BJP After ED Raid

'ஈடி வரும் முன்னே, பாஜகவில் இணைவார் பின்னே' என்று புதிய பழமொழியே புழக்கத்தில் வந்துவிடும் போல. ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றே பாஜக மறுத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி உட்படப் பல எதிர்க்கட்சியினர், 'காவி கட்சி'யில் இணைந்து விட்டால் இரவு நிம்மதியாகத் தூங்கலாம். ஈடி ரெய்டு பிரச்சினையே வராது என வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக 2021 இல் சஞ்சய் பாட்டீல், 'நான் பாஜக எம்பி என்பதால் என் வீட்டுக்கு ஈடி ரெய்டு வராது' என்று வெளிப்படையாகவே ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்லி தொகுதியின் மக்களவை உறுப்பினர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்குக் கடுமையான மோதல் எழுந்த காலகட்டத்தில் இதை சஞ்சய் சொன்னார். அதைப் போல் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருக்கு ஈடி பல நெருக்கடிகளைக் கொடுத்தது. 2000 கோடி கூட்டுறவு வங்கி ஊழல் செய்துவிட்டதாக பாஜக சொன்னது.

Political Leaders Joined BJP After ED Raid

சரத்பவாரை வீழ்த்தி, பாஜகவுக்கு அஜித் பவார் சில காய்களை நகர்த்தினார். தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ளார். இவர் இன்று பாஜக நிழலில் நிம்மதியாக இருந்து வருகிறார்.

அதன்பின்னர் அவர் சூத்திரதாரியாக மாறி, பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து மகாராஷ்டிரா அரசியலையே தலைகீழாகப் புரட்டினார். அதன் பின்னர் இப்போது ஈடி பயம் இல்லாமல் இனிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறார் அஜித்பவார்.

இப்போது இந்த ஈடி ரெய்டு பட்டியலில் புதியதாக இணைந்துள்ளார் ஜார்க்கண்ட் முன்னாள் ஹேமந்த சோரன்.

அப்படித்தான் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா பாஜகவினரால் ஊழல்வாதி என முத்திரை குத்தப்பட்டவர். இன்று அதே பாஜக ஆதரவில் முதல்வராகப் பதவியை அலங்கரித்து வருகிறார்.

ஒருமுறை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே உருவாகி வருகிறார் என்று பெருமையாக வெளிப்படையாக மீடியாக்களிடம் தெரிவித்தார்.

Political Leaders Joined BJP After ED Raid

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சமயத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கார்டு வலம் வருகிறது. அதாவது, 'அமலாக்கத்துறையின் அயராத உழைப்பால் பாஜகவிற்கு வந்தவர்கள் பட்டியல்' என்ற தலைப்பில் அந்த அட்டை உலா வருகிறது.

அதில் நகைச்சுவையாகப் பயனாளர் பெயர், ஈடிக்கு முன் ஈடிக்கு பின் என்று அட்டவணைப் போட்டு பாஜகவை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்த சுவேந்து அதிகாரி. இவர் மேற்கு வங்காள அரசில் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவர் மீது 1000 கோடி சாரதா சிட் பண்ட் ஊழல் முன்வைக்கப்பட்டது. இந்த ஊழலில் எப்படியாவது மம்தாவைச் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அப்போது விவாதிக்கப்பட்டது.

இவர் 2020இல் பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர் ஈடி ரெய்டு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் இப்போது எந்த நெருக்கடியும் இல்லாமல் பாஜகவில் கட்சிப் பணியாற்றி வருகிறார்.

இதே திரிணாமுல் கட்சியிலிருந்தவர் முகுல் ராய். யுபிஏ கூட்டணி 2வது முறை ஆட்சி அமைத்தபோது கப்பல் போக்குவரத்துத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர். பின்னர் ரயில்வே துறையின் இணை அமைச்சராகவும் இருந்தார். அவருக்கு எதிராகப் பல வழக்குகள் வரிசை கட்டின.

அடுத்தவர் ஜிமாந்தா பிஸ்வா சர்மா. இவர் அசாம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரை எதிர்த்து 'சர்மா ஊழல்' என்ற புத்தகத்தை பாஜகவினர் வெளியிட்டனர். அதன்பின்னர் இவர் பாஜகவில் இணைந்தார். இப்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அசாம் மாநிலத்தின் 15வது முதல்வராகக் கடந்த 10 மே 2021 அன்று பதவியேற்றார்.

Political Leaders Joined BJP After ED Raid

காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒருவரின் ஊழலை எதிர்த்து புத்தகம் போட்ட பாஜக, இன்று அவரையே முதல்வராகப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து வருவது ஏன் ? என்று அம்மாநிலத்தைக் கடந்து இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டெல்லியில் இவர் திடீரென்று மாயமாகி விட்டதாக அவரது மகன் புகார் கூறினார். அந்தச் செய்து பெரிய புயலைக் கிளப்பியது. இவர் பாஜகவில் சேர்ந்த பிறகு இவருக்கு எதிரான வழக்குகள் அமைதியாகிவிட்டன என்பது பல கட்சிகளின் கணிப்பாக உள்ளது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கட்டம் கட்டப்பட்டார் நாராயண் ரானே. இவர் சிவசேனா கட்சியிலிருந்தவர். இவரும் வழக்குகளை எதிர் கொள்வதற்குப் பயந்து பாஜகவில் சேர்ந்துவிட்டார்.

Political Leaders Joined BJP After ED Raid

இவரைத் தொடர்ந்து ஈடிக்கு பயந்து பாஜகவில் இணைந்தவர் பிரேம் காண்டு. 2016 வரை ஊழல் மற்றும் கிரிமினல் குற்றவாளி எனப் பேசப்பட்டவர். தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக இவர் பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராகவே ஆகிவிட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இவரைத் தொடர்ந்து இதே கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேல் மீது ஏர் இந்தியா விமான ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இவரும் ஈடி இரும்புக் கரத்திற்கு அடிபணிந்தார். பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதன்பின்னர் சிபிஐ தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டது.

Political Leaders Joined BJP After ED Raid

அடுத்து சாகான் புஜ்பால். இவருக்கும் என்.சி.பி கட்சியைச் சேர்ந்தவர். ஊழல் வழக்கு ஒன்றில் கைதாகும் சூழல் வரை சென்றார். அதன்பின்னர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிற்குச் சென்றார். தற்போது அவர் குற்றமற்றவராக வலம் வருகிறார் என்கிறார்கள் அம்மாநில காங்கிரசார்.

தற்போது அவர் பாஜக நிழலில் நிம்மதியாக இருந்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+