ஜனநாயகன்: வரிசை கட்டிய கதர் தலைகள்! கூட்டணியை விடுங்க.. திமுகவுக்கு எதிராக காங்., பிளான் இதுதான்
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்காக, காங்கிரஸ் குரல் கொடுத்திருப்பது திமுகவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணியில் இருந்துக்கொண்டு எதிரிக்காக குரல் கொடுப்பதை உடன்பிறப்புகள் துளியும் ரசிக்கவில்லை. ஆனாலும், இப்படி குரல் கொடுப்பதற்கு பின்னால் பிளான் இருப்பதாக கதர் தலைவர்கள் கூறுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்சார் போர்டு, வேண்டும் என்றே பாலிட்டிக்ஸ் செய்கிறது என்று விஜய் தரப்பினர் கொந்தளிக்கின்றனர்.

உறவில் விரிசல்
இந்த விஷயத்தை பொறுத்தவரை, திமுக கண்டும் காணாமலும் இருக்கிறது. தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் இன்னும் நல்லதாக போச்சு! என உடன்பிறப்புகள், இந்த விவகாரத்தை வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் காங்கிரஸ் சீனுக்குள் வந்திருக்கிறது. கதர் தலைகள் ஒவ்வொருவராய் வரிசை கட்டி, ஜனநாயகனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏற்கெனவே பஞ்சாயத்தில் இருக்கும் காங்கிரஸ்-திமுக உறவில் தற்போது மேலும் விரிசல் அதிகரித்திருக்கிறது.
காங்., எம்பி மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "ஆர்எஸ்எஸ் பிரச்சாரப் படங்கள் எடுபடாமல் போனதால், அப்படியான படங்கள் மீதான நம்பிக்கையை கைவிட்டு, மொத்த சினிமா துறையை கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சிக்கிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியத் திரைப்படத் துறை தற்போது குறிவைக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தணிக்கை வாரியம் ஆயுதமா?
அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமையையும் கருத்து சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது. ஆனால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கீழ், இந்த உரிமை அச்சத்தின் மூலம் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தப்படுகிறது. திரைப்படங்களையும், அவற்றின் மூலம் வெளிப்படும் கருத்துகளையும் கட்டுப்படுத்த தணிக்கை வாரியமும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் நிலைபெற வேண்டும்
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் ஒருபக்கம் அச்சுறுத்தல் கருவிகளாக மாற்றப்பட, மறுபுறம் பாஜக-ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சாரம் 'கலாச்சாரம்' என்று திணிக்கப்படுகிறது. திரைப்படங்களுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை; சட்டப் பாதுகாப்பே அவசியம். கலை அதிகாரத்திற்கு அடிபணியும்போது ஜனநாயகம் நிலைபெறாது" என்று கூறியிருந்தார்.
மறுபுறம் எம்பி ஜோதிமணி, ஒருபடி மேலே சென்று ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்காததால், தணிக்கை வாரியமே கலைக்கப்பட வேண்டிய ஒன்று என கூறியுள்ளார்.
எம்பி ஜோதிமணி
அதாவது, "ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும். ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.
தணிக்கை வாரியம் எதுக்கு?
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன்.என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
எதிர்க்க வேண்டும்
பெண்களை ஆபாசமாகப் பேசுவது,சித்தரிப்பது,இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சீனுக்குள் வந்த இடதுசாரிகள்
ஜனநாயகனுக்கான சப்போர்ட் இத்துடன் நிற்கவில்லை. இடதுசாரிகள் மத்தியிலும் ஆதரவு குரல்கள் எழ தொடங்கியுள்ளன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு, வெளிப்படையாக ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
விஜய்க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு ? கந்தன் மலைக்கு தணிக்கைச் சான்று வழங்குவீர்கள்! ஜனநாயகனுக்கு மறுப்பீர்களா ? தணிக்கை குழு சொன்னது போல, திரைப்படத்தில் 15 கட் செய்த பின்னரும் சான்றிதழ் வழங்காதது, விஜய்யை அடிபணிய வைப்பதற்கான முயற்சி தான் என்பது தெளிவாகிறது என்று இளைஞர் அமைப்பு விமர்சித்திருக்கிறது. விரைவில் இதே கருத்தை சிபிஎம், சிபிஐ கட்சி தலைவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
திமுக நிலைப்பாடு
ஆனால் இதற்கு அப்படியே நேர் எதிராக, திமுக இந்த விஷயத்தை பார்க்கிறது. சபாநாயகர் அப்பாவு, "ஜனநாயகன் கடைசி படம் என்பதால் சென்சார் விவகாரத்தில் விஜய் பில்டப் செய்கிறார். ரசிகர்களை கொதிநிலையில் வைத்திருக்கதான் இந்த பில்டப்" என்று கூறியிருக்கிறார். இப்படி இருக்கையில் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்க்கு சப்போர்ட் செய்வது ஏன்?
விஷயம் இதுதான்
தமிழக அரசியலில் முன்பு அதிமுக vs திமுக என இருந்த காலம் மாறி, பாஜக+அதிமுக vs திமுக என தற்போது மாறியிருக்கிறது. பாஜகவுடன் சேர்ந்ததால், அதிமுகவின் பலம் குறைந்திருக்கிறது. எனவே திமுக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இப்படியே போனால், திமுகவை கண்ட்ரோலில் வைப்பது சிக்கலாகிவிடும் என்பதால், திமுகவுக்கு எதிராக விஜய்யை நிறுத்த கட்சிகள் யோசிப்பதாக சொல்லப்படுகிறது.
எதிரி இருந்தால், கூட்டணிகள் அங்கு தாவி விடுமோ என்கிற அச்சம் திமுகவுக்கு இருக்கும். எனவே சீட் பேரம் தொடங்கி, கூட்டணிகளின் இதர கோரிக்கைகளை நிறைவேற்ற, விஜய்யை வளர்க்கும் யுக்தி உதவலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆகவேதான் காங்கிரஸ், இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க களத்தில் குதித்திருக்கிறார்கள்.
-
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications