சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

Google Oneindia Tamil News

சென்னை: பெரியாரின் 142-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்

Recommended Video

    திராவிடத்தின் தந்தை.. சுயமரியாதை ஆசான்.. பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 142-வது பிறந்த நாள் - வீடியோ

    சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Political party leaders pay homage to Periyar statue

    இதேபோல் சென்னை அண்ணா சாலை ஜிம்சன் அருகே நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஸ்டாலின், மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    சமூக நீதி-சமத்துவம்-சாதி ஒழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம் என்றும் மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம் எனவும் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ஈராயிரம் ஆண்டுகளாய் அழுக்கேறியிருந்த திராவிடர் அறிவை- வாழ்வை தன் பகுத்தறிவு தடி கொண்டு வெளுத்தவர் பெரியார் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    பெரியார் 142-வது பிறந்தநாள்... அவரது சிந்தனையில் உதித்த வரிகளில் சில மட்டும் இங்கே..! பெரியார் 142-வது பிறந்தநாள்... அவரது சிந்தனையில் உதித்த வரிகளில் சில மட்டும் இங்கே..!

    தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் மதிமுக, தேமுதிக, கட்சி அலுவலகங்களில் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    English summary
    Political party leaders pay homage to Periyar statue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X