முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது... குவியும் பாராட்டுக்கள்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருதை வழங்கி கவுரவித்துள்ளது தமிழகத்தின் பிரபல பண்பலை(fm station) நிறுவனம் ஒன்று.
இந்த விருதை அந்த பண்பலை நிறுவனத்தின் நிர்வாகத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வழங்கினர்.
ஏற்கனவே மத்திய அரசின் நல்லாட்சி விருது தமிழகத்திற்கு கிடைத்த நிலையில் இப்போது அரசியல் ஆளுமை விருதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.

குவியும் பாராட்டு
முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது தரப்பட்டுள்ளது. பிரபல பண்பலை நிறுவனமான ஹலோ எஃப்.எம். சார்பாக இந்த விருது அளிக்கப்பட்டது. அரசியலில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த விருது கொடுக்கப்பட்டது.

கவுரவிப்பு
அரசியல் ஆளுமை விருதை தருவதற்காக ஹலோ எஃப்.எம். நிர்வாக அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்திருந்தனர். அவர்களை வரவேற்று முதல்வரின் அறைக்கு அழைத்துச்சென்றனர் அவரின் தனிச்செயலாளர்கள். விருதை முதல்வரிடம் வழங்கிய அந்தக் குழு அவருக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தது.

விருது மேல் விருது
அண்மையில் தான் தமிழக அரசுக்கு மத்திய அரசின் நல்லாட்சி விருது தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் நன்றி தெரிவித்து அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அவருக்கு அடுத்தப்படியாக அரசியல் ஆளுமை விருது கிடைத்திருக்கிறது.

நேரில் வாழ்த்து
இதனிடையே முதல்வரை சந்தித்த அமைச்சர்கள் அரசியல் ஆளுமை விருது பெற்றதற்காக அவரிடம் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அரசுக்கும், உங்களுக்கும் விருது மேல் விருது குவிவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது என முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் இருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications