ரெண்டு இடத்துலயும் துண்டு..விஜய்யா? எடப்பாடியா? ஆட்டம் காட்டும் ஆதவ் அர்ஜுனா? குழப்பத்தில் சீனியர்கள்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் வெளியேறிய ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் உலாவின. ஆனால் திடீரென நேற்று அவர் விஜயை சந்தித்து பேசி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மூலம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆதவ் அர்ஜுனா திடீரென விஜய்யை சந்தித்து பேசி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவும் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. திமுக பிரபல தேர்தல் வியூக நிபுணர் ஒருவரை தேர்தல் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பிலும் கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே திமுகவுக்காக பணியாற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அவரது ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம் அதற்கு பிறகு வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமாக மாற்றப்பட்டது. அப்போது திமுகவுக்காக பிரச்சார வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான் தான் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அவருக்கு உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பல்வேறு விவகாரங்களில் மூத்த நிர்வாகிகளுடன் பிணக்கு ஏற்பட்டதால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார.
பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர், நடிகர் விஜய்யின் தவெகவில் இணையப் போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விதித்த நிபந்தனைகள் சற்று கடினமானதாக இருந்ததால், விஜய் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் அதிமுகவில் அவர் இணைவது உறுதி என அதிமுக சீனியர்கள் கூறி வந்தனர். அதிமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு என்ற புதிய அணி உருவாக்கப்பட இருப்பதாகவும், அதன் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எனக் கூறினர்.
விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து பேசியதாக கூறப்படுகிறது. தற்போது அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில் அது தொடர்பாக தனது விமர்சனங்களை முன்வைக்க விளையாட்டு மேம்பாட்டு பிரிவு வசதியாக இருக்கும் என்பதால் அதனை எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைவதற்கு எடப்பாடி இடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் எனவும் கூறப்பட்டது. இப்படியாக ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென விஜயை அவர் சந்தித்து பேசி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் கட்சியில் ஆலோசகராக இருக்கும் ஒருவரை வெளியேற்றிவிட்டு ஆதவ் அர்ஜுனாவை கட்சிப் பணியிலும் ஆலோசகராகவும் நியமிக்க விஜய் சம்மதித்து இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு விஜய் பக்கம் சென்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவில் அவர் இணைவது உறுதி, தேர்தல் வியூகங்களை அவரது நிறுவனமும் மற்றொருவரின் நிறுவனமும் சேர்ந்து தான் வகுத்துக் கொடுக்கும் என கூறுகின்றனர் அதிமுகவினர். அதே நேரத்தில் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர்.
-
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications