ரூ.100 கோடி இடம் இருப்பதே வழக்குக்கு பின் தான் தெரியும்.. அரசியலுக்காக வீண் பழி.. அமைச்சர் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பழனியில் இப்படி ஒரு இடம் இருக்கிறது அந்த இடம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மதிப்பு இருக்கிறது என்பதே எனக்கு இந்த வழக்கிற்கு பின்னர் தான் எனக்கு தெரியும். ரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி போடுகின்றனர். எனது உறவினர்கள் இதை செய்துவிட்டார்கள், நான் தான் இதற்கு பின்னால் இருக்கிறேன் என்று பழி சுமத்திக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்று அரசியலுக்காக அவர்கள் வழக்கமாக செய்வது தான் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பழனி நில விவகாரம் தொடர்பான கேள்விக்கு, எதை வைத்து அரசியல் பண்ண வேண்டும் என்று தெரியாமல் இதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கின்றனர். உண்மையில் பழநியில் அப்படி ஒரு இடம் இருக்கிறது அந்த இடம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மதிப்பு இருக்கிறது என்பதே எனக்கு இந்த வழக்கிற்கு பின்னர் தான் எனக்கு தெரியும்.

political-vendetta-behind-100-crore-land-allegations-says-minister-ramesh

அந்த நிலத்தின் பத்திரப் பதிவு ஜூலை 7 ஆம் தேதி நடந்து இருக்கிறது. ஜூன் 30 ஆம் தேதியே அந்த நிலத்தின் ரெஜிஸ்டிரேஸன் தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை முதலில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நான் தான் முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தேன். இதில், உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டவுடனேயே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றினார்.

சிபிசிஐடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான அறிக்கையை அவர்கள் விரைவில் தாக்கல் செய்வார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப் வேண்டும். அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி போடுகின்றனர். எனது உறவினர்கள் இதை செய்துவிட்டார்கள், நான் தான் இதற்கு பின்னால் இருக்கிறேன் என்று பழி சுமத்திக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்று அரசியலுக்காக அவர்கள் ரெகுலராக செய்வது தான்.

இந்த மாதிரி எல்லாம் அரசியல் செய்து மக்கள் மத்தியில் என் பெயரை கெடுக்க வேண்டும், ஆட்சியின் பெயரை கெடுக்க வேண்டும். முதல்வரின் பெயரை கெடுக்க வேண்டும் என்று எல்லாம் யோசிக்காமல் மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்று யோசித்தால் மக்கள் உங்களை கொஞ்சமாவது திரும்பி பார்ப்பார்கள்.

நீட் போராட்டம் தொடர்பாக முதல்வர் ஏற்கனவே மிகத் தெளிவாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நியாயமாக ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும். அதற்கு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அது தான் நிரந்தர தீர்வு என முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.

நீட் தேவை கிடையாது, நீட் வேண்டாம் என்று நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம். சில பேர் இதுக்குள் புகுந்து முதல்வருக்கு எதிராக இதனை திருப்ப வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றால் அது அரசு எப்படி கையாளுமோ, அதனை அப்படி கையாளும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+