Exclusive: VIPக்கள் வீட்டுத் தீபாவளி!ஆட்டுகால் பாயா! 300 பேருக்கு விருந்து! விவரிக்கும் பிரபலங்கள்!
சென்னை: தீபாவளி திருநாளுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள் அதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் அரசியல் வி.ஐ.பி.க்கள் வீட்டுத் தீபாவளி கொண்டாட்டம் பற்றி அறிவதற்காக நாம் சிலரிடம் பேசினோம்.
அப்போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ஒன் இந்தியா தமிழிடம் மனம் திறந்து அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அதன் விவரம் பின்வருமாறு;

கோகுல இந்திரா
''தீபாவளி பண்டிகை அன்று யாரையும் நான் சந்திக்கமாட்டேன். அன்று முழுவதும் குடும்பத்தினருடன் இருந்து அவர்களுக்கான உணவுகளை நானே சமைப்பேன். எங்கள் வீட்டில் சைவம், அசைவம் என இரண்டு வகை உணவுகளையும் தயார் செய்வோம். தீபாவளியன்று பெரிதாக எங்கள் வீட்டில் கொண்டாட்டம் இருக்காது, சாமி கும்பிட்டுவிட்டு உணவு தயார் செய்வோம் அவ்வளவு தான். ஆனால் தீபாவளி பண்டிகை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை கொடுக்கும் முந்தைய 4 நாட்கள் தான் உண்மையிலேயே மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியது. இந்த நாட்கள் தான் எனக்கு கொண்டாட்டத்திற்குரியது.ஏனென்றால் அப்போது தான் பணியாட்கள், தெரிந்தவர்கள், மாற்று மதத்தினர்கள் என அனைவருக்கும் தீபாவளி இனிப்பு கொடுத்து விடுவேன். எப்போதுமே காரைக்குடியில் ஆர்டர் கொடுத்து அங்கிருந்து தான் இனிப்பு பலகாரங்கள் வாங்கி சென்னையில் உள்ளவர்களுக்கு கொடுப்பேன். இதேபோல் ஆண்டுதோறும் தீபாவளிக்கு 50 பேருக்கு குறையாமல் புத்தாடைகள் எடுத்து கொடுப்பது எனது வழக்கம். இந்தாண்டும் அதை செய்திருக்கிறேன். இதில் கிடைக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் தீபாவளியன்று கூட கிடைக்காது. இதேபோல் இளம் வயதில் தீபாவளியன்று தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என விரும்புவேன். ஆனால் இப்போதெல்லாம் அந்த ஆசை எங்கே போனது என்றே தெரியவில்லை'' என சரவெடி போல் படபடத்தார் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

வானதி சீனிவாசன்
''தீபாவளி அன்று அமாவாசை தினம் இல்லையென்றால் எங்கள் வீட்டில் நான் வெஜ் தான். ஆட்டுக்கால் பாயாவில் தான் காலை உணவே தொடங்கும். மதியமும் இதேபோல் அசைவ உணவு தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நானே வீட்டில் பலகாரங்களை செய்துகொள்வேன். ஆனால் இப்போது அப்படி செய்ய முடிவதில்லை. ஆனால் குலாப் ஜாமுன் மட்டுன் நான் தயாரித்துக் கொள்வேன். நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தீபாவளியை காட்டிலும் பொங்கல் பண்டிகையை இன்னும் சிறப்பாக கொண்டாடுவோம். சென்னைக்கு குடிபெயர்ந்த பின்னர் தான் தீபாவளி பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடத் தொடங்கினோம். எனது கணவர் மத்திய அரசு வழக்கறிஞர் என்பதால் அவர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், நண்பர்கள் என பலருக்கும் இனிப்புகள் வாங்கிக் கொடுப்பார்.'' என தனது வீட்டுத் தீபாவளி கொண்டாட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்தார் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்.

மாணிக்கராஜா
''எங்க ஜமீனில் தீபாவளி அன்று குறைந்தது 300 பேருக்காவது விருந்து நடக்கும். இதேபோல் ஒவ்வொரு வருஷமும் தீபாவளி பண்டிகையின் போது 50 கிலோ இனிப்புகளாவது நண்பர்கள், தொழிலாளர்கள், என பலருக்கும் கொடுத்து வருகிறேன். காலையிலேயே மட்டன், சிக்கன் தான். அசைவ உணவுகள் இல்லாத தீபாவளியை நினைத்தே பார்த்ததில்லை. தீபாவளிக்கு துணி எடுக்கனும் பணம் வேண்டும் என யாரெல்லாம் உதவி கேட்டு வருகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆண்டவன் எனக்கு கொடுத்திருப்பதை, பிறருக்கு நான் கொடுக்கிறேன். இதேபோல் எங்கள் ஜமீனில் பணியாற்றும் எல்லா தொழிலாளர்களுக்கும், என்ன சிரமமாக இருந்தாலும் போனஸ் கொடுத்துவிடுவேன். எங்க வீட்டுத் தீபாவளி இப்படித்தான் போகும்'' எனக் கூறுகிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல செயலாளரும், கடம்பூர் ஜமீனுமான மாணிக்கராஜா.

நாஞ்சில் சம்பத்
''எனக்கு தீபாவளி கொண்டாடுவதில் துளியும் நம்பிக்கையில்லை, ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் பிரம்மாதமாக கொண்டாடுவார்கள். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே கோழி அறுத்து குருமா வைப்பார்கள். இதேபோல் தீபாவளியன்று மட்டன் பிரியாணி செய்து சிக்கன் பொறிப்பார்கள். தீபாவளியை நான் கொண்டாடவில்லை என்றாலும், இதையெல்லாம் சாப்பிட்டுக் கொள்வேன். அதேபோல் தீபாவளி அன்று என்னைத் தவிர எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்துகொள்வார்கள். ஆனால் நான் குளிக்கமாட்டேன், புத்தாடை அணியமாட்டேன். மாலையில் தான் நான் குளிப்பேன். நான் இப்படித்தான் என்று தெரிந்ததால் என்னை யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்'' என தனது வீட்டுத் தீபாவளி பண்டிகை குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார் திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications