“வெறும் GD பாலம் என்றா பெயர் வைக்க முடியும்? புரியாமல் குறுக்குசால் ஓட்டக்கூடாது” - தங்கம் தென்னரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி பாலம் என்று எப்படி வைக்க முடியும்?" என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் பொது கூட்டகட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி மறு பெயரிடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இதுகுறித்து பேசப்பட்டது.

Politics Over Removal of Caste Names and GD Naidu Is Betrayal to Society Minister Thangam Thennarasu

இதற்கிடையே கோவையில் 10 கி.மீ தொலைவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். ரூ.1,791 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான இந்த மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல்வர் திறந்து வைக்கும் பாலத்தில் சாதி பெயர் இருக்கலாமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்தப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே இதனை திரித்துக் கூறுகிறார். சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். அவ்வாறு அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம். சாதிப் பெயர்களை நீக்க நீதிமன்ற அமைப்புகளும் சொல்லியிருக்கின்றன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து பகுதிகளிலும் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும். நாங்கள் இதை அரசியல் காரணங்களுக்காக செய்யவில்லை.

கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை குறையாக சொல்வதா? மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டவர் ஜி.டி.நாயுடு. நாயுடு என்பதை நீக்கிவிட்டு ஜி.டி. என்ற பெயரை எப்படி வைக்க முடியும்? ஜி.டி.நாயுடு பாலம் என்று வைத்தால்தான் அவர் யார் என்பதை அறிய முடியும். அவர்கள் எவ்வாறு அறியப்பட்டார்களோ அப்படி குறிப்பிட்டால் தான் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும். இவற்றை விதி விலக்குகளாகவே கருதப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை.

எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்னும் சிலரும் இதனை விமர்சிக்கின்றனர். இதில் அரசியல் செய்து குறுக்குசால் ஓட்டுவது கண்டிக்கத் தக்கது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், எந்த நோக்கத்துக்காக அரசாணை வெளியிடப்பட்டது என்றும், பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் ஏன் வைக்கப்பட்டது, அது விதி விலக்கு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+