"செம ட்விஸ்ட்".. ரஜினியை தூக்கி சாப்பிட்ட சீமான்.. டஃப் கொடுக்கும் கமல்.. சுவாரஸ்ய சர்வே!

ரஜினியைவிட சீமானுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக கிடைத்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாசகர்களிடம் ஒரு கேள்வி கேட்டோம்.. கிடைத்த பதிலோ செம சுவாரஸ்யமாக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வித்தியாசமான காட்சிகள் அரங்கேறின. 3 முக்கிய கட்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை தந்தன.. ஒன்று அமமுக, அடுத்து நாம் தமிழர் கட்சி, மற்றொன்று மக்கள் நீதி மய்யம்.

கூட்டணிகள் தவிர்த்துப் பார்த்தால், அமமுக 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.. சீமானின் நாம் தமிழர் கட்சி 3.93 சதவீதம் பெற்றது.. கமலின் மநீம 3.77 சதவீதம் வாக்குகளை பெற்றது.. அதாவது 10 வருடம் கட்சியை நடத்திவரும் சீனியர் சீமானை, ஜூனியர் கமலின் கட்சி கிட்டத்தட்ட வாக்கு சதவீதத்தில் நெருங்கிவிட்டது.

 பரபரப்பு

பரபரப்பு

ஆக இந்த வாக்குகளை எல்லாம் கூட்டினால் கிட்டத்தட்ட 12 முதல் 13 சதவிகிதம் வரை வரும்... இன்னும் ஓபனாக சொல்ல வேண்டுமானால், திமுக, அதிமுக ஓட்டுக்களை சிதறடித்ததே இந்த கட்சிகள்தான். அதனால்தான், இந்த முறை நடக்க போகும் சட்டமன்ற தேர்தலில் இவர்களின் வருகையும், கூட்டணியும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 சசிகலா

சசிகலா

இதில், டிடிவி தினகரன், கூட்டணி, தேர்தல் பற்றி வாயே திறக்காமல் இருக்கிறாரே தவிர, சத்தமில்லாமல் களப்பணிகளை நகர்த்தி வருகிறார்.. சசிகலா வருகையும் விரைவில் இடம் பெற உள்ளதால், அமமுக அதிரடிகளில் இறங்கக் காத்திருக்கிறது.. மேலும் எதிர்பார்த்த குக்கர் சின்னமே கிடைத்துவிட்டதால், டபுள் சந்தோஷத்தில் அமமுக உள்ளது.. அதனால் இந்த முறை அதிமுகவுக்கே டஃப் தரும் அளவுக்கு டிடிவி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

 பாஜக - திமுக

பாஜக - திமுக

சீமானை பொறுத்தவரை, கமலுடன் சேரப் போவதாக ஒரு பேச்சு உள்ளது.. இதைதவிர, திமுக, பாஜக என எல்லா கட்சிகளையுமே லெப்ட் & ரைட் வாங்கி கொண்டிருப்பதால், இளைஞர்களின் கவனம் சீமான் பக்கம் திரும்பி உள்ளது.. மேலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் மொத்த தொகுதிகளில் சரி பாதிக்கு பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தி வருவது அக்கட்சிக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளது.

 ஓவைசி

ஓவைசி

அடுத்தவர் கமல்.. சமீப காலமாக எதிர்பாராத அதிரடியைக் காட்டி வருகிறது மக்கள் நீதி மய்யம். 3வது அணி இவர் தலைமையில் அமையும் என்ற அளவுக்கு மநீம வளர்ந்துள்ளது.. ஒரு பக்கம் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு என்கிறார்கள், இன்னொருபக்கம் சீமானுடன் என்கிறார்கள்.. மற்றொரு பக்கம் ஒவைசியுடன் என்கிறார்கள்.. இதற்கு நடுவில் திமுக கூட்டணி கட்சிகளும் கமலுடன் சேர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரஜினி கமலுடன் சேருவார் என்கிறார்கள்.. ஆக மொத்தம் இந்த முறை தேர்தலில் கமலின் அரசியல் மிக முக்கிய மாற்றத்தை தருவதாக உள்ளது.

 கொரோனா

கொரோனா

இந்த இடத்தில் பாமக, பாஜகவையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. சத்தமே இல்லாமல் கொரோனா விழிப்புணர்வு விஷயங்களை சொல்லி கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ், திடீரென போராட்டம், ஆர்ப்பாட்டம், இடஒதுக்கீடு என பரபரப்பில் இறங்கி விடவும், எந்த மாதிரியான அரசியலை அவர் முன்னெடுக்க போகிறார் என்பது ட்விஸ்ட்தான்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

பாஜகவோ, வேற லெவலில் உள்ளது.. முன்பு இருந்த பாஜக இல்லை இது.. அப்படியே டோட்டலாக மாறி உள்ளது.. நிறைய மாற்றங்கள் தென்படுகிறது.. பிரபலங்கள், விஐபிக்கள், அக்கட்சியில் இணைந்துள்ளனர்.. அதிரடிகளை கையில் எடுத்து அதிமுகவையே சில நேரம் திக்குமுக்காட வைத்து வருகிறது. எனினும், அத்தனை பேரையும் கலக்கத்திலும், ஆர்வத்திலும், எதிர்பார்க்க வைத்திருப்பது ரஜினிதான் என்பதை மறுக்க முடியாது. புதிதாக கட்சி ஆரம்பிக்க உள்ளதால், நிச்சயம் திமுக ஓட்டுக்களை பிரிக்கும் சக்தியாக உருமாற வாய்ப்பு உள்ளது.

 சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

ஆக, இந்த கட்சிகளின் இன்றைய சூழலை கருத்தில் கொண்டும், அக்கட்சி தலைவர்கள் மேற்கொண்டு வரும் களப்பணிகளை கொண்டும், ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்பு ஒன்றை நம் வாசகர்களிடம் நடத்தினோம்.. அதில் கேட்கப்பட்ட கேள்வி இதுதான், "தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு இவர்களில் யார் கிங் மேக்கராக உருவெடுக்க வாய்ப்பிருக்கு?" என்பது. மக்களிடம் தற்போதைய டிரெண்டில் லைம்லைட்டில் இருக்கும் கட்சிகளை மையமாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி இது.

வாக்குகள்

வாக்குகள்

அதற்கு தரப்பட்ட ஆப்ஷன்களில், மக்கள் நீதி மய்யத்துக்கு 11.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.. அமமுகவுக்கு 3.4. சதவீதமும், பாமகவுக்கு 3.78 சதவீதமும், பாஜகவுக்கு 2.13 சதவீதமும் வாக்குகள் விழுந்துள்ளன.. நாம் தமிழர் கட்சிக்கு 17.67 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.. ரஜினிகாந்த் (கட்சி ஆரம்பித்தால்) என்ற ஆப்ஷனுக்கு 13.01 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. கிங் மேக்கராக வாய்ப்பே இல்லை என்ற ஆப்ஷனுக்கு அதிகபட்சமாக 48.93 சதவீம் பேர் வாக்களித்துள்ளனர்.

 வாசகர்கள்

வாசகர்கள்

இதில் கமல்ஹாசனை ரஜினிகாந்த் முந்தியுள்ளார், ரஜினியை நாம் தமிழர் கட்சி முந்தியுள்ளது என்பதுதான் படு சுவாரஸ்யமாக இருக்கிறது. அமமுக, பாமக, பாஜவை கிங் மேக்கராக நமது வாசகர்கள் பார்க்கவில்லை என்பது விழுந்த வாக்குகளைப் பார்த்தால் தெரிகிறது.

 கிங் மேக்கர்

கிங் மேக்கர்

இது ஒரு கணிப்புதான் என்றாலும் 2 விஷயங்கள் ஆச்சரியத்தை தருகிறது.. ஒன்று ரஜினிக்கு விழுந்துள்ள வாக்கு சதவீதம்.. பாஜக, பாமக, மநீம, அமமுகவைவிட, கட்சியே ஆரம்பிக்காத ரஜினியை மக்கள் நம்புவது தெரிகிறது.. அதேபோல, என்னதான், இத்தனை பேர் இருந்தாலும் இவர்களில் யாருமே "கிங் மேக்கராக" வாய்ப்பே இல்லை என்று 48.93 சதவீதம் பேர் திரண்டு வந்து சொல்லி உள்ளனர். அப்படியானால், இந்த தலைவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்பதையே இந்த கணிப்பு உணர்த்துகிறது போலும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+