பொள்ளாச்சி வீடியோ வழக்கு: பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்கிறது.
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்கிறது.
பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது. இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பலை சேர்ந்த 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க மூத்த பத்திரிக்கையர் நக்கீரன் கோபால் வெளியிட்ட இந்த வீடியோவும் முக்கிய காரணம். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியிட்டது தொடர்பாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்கிறது.
வீடியோ வெளியிட்டது ஏன், வீடியோ கிடைத்தது எப்படி என்று விசாரிப்பதற்காக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்கிறது. அதேபோல் பத்திரிக்கையாளர் தேனி கண்ணனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்துள்ளார்.
அப்போது நக்கீரன் கோபாலின் சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜரானார். நக்கீரன் கோபால் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் வக்கீல் ஆஜராகி உள்ளார். தற்போது புதிய திருப்பமாக சிபிசிஐடி போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications