பொள்ளாச்சி.. காதல் நாடகத்தை நம்பாதீர்கள் பெண்களே.. ராமதாஸ் கண்டனம்!

காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து டிவிட் செய்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிர வைக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தகவல்கள்

    சென்னை: காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து டிவிட் செய்து உள்ளார்.

    பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து செய்திகள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது.

    250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பலை சேர்ந்த 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

     விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்

    விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்

    இவர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு பின் அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் இவர்கள் மீது போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரும் வைக்கப்பட்டு இருக்கிறது.

    ராமதாஸ் அறிக்கை

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்துள்ள டிவிட்டில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    நாடக காதல்

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை!, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

     என்ன பெரிதாகிறது

    என்ன பெரிதாகிறது

    ராமதாஸ் போலவே பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் இதில் வரிசையாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் தற்போது பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+