ஒரு பிறழ்சாட்சி கூட இல்லை! துல்லியமாக காய் நகர்த்தி.. பொள்ளாச்சி கேஸில் சிபிஐ வென்றது எப்படி? சபாஷ்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சிகளில் ஒன்று கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் பயமின்றி, சுதந்திரமாக சாட்சியளித்துள்ளார்கள். 9 பேர் மீதான 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் தான் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதோடு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு அபராதம் தீர்மானிக்கப்படுகிறது. பெண்ணுக்கு தேவையான மருத்துவ சேவைகள் மற்றும் புனரமைப்புக்காக செலவழிக்க வேண்டிய தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் 2 இழப்பீடு வழங்க நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10-15 லட்சம் வரை 3 இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளுக்கு விதித்த அபராதத்தையும் வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் 5 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் தகவல் வெளியிட்டு உள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சிகளில் ஒன்று கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் பயமின்றி, சுதந்திரமாக சாட்சியளித்துள்ளார்கள். 9 பேர் மீதான 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் பார்த்துக்கொண்டது.. எல்லா பெண்களும் முன்வந்து பயமின்றி வாக்குமூலம் கொடுத்ததோடு அதில் உறுதியாக நின்றதும், சிபிஐ அதை உறுதி செய்ததும் வழக்கின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். ஒரு பிறழ்சாட்சி கூட இல்லாமல் துல்லியமாக காய் நகர்த்தி சிபிஐ வழக்கை வென்றுள்ளது.
இந்த வழக்கில் பின்வரும் பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டன,
20 B கூட்டுசதி
366 - பெண்ணை கடத்தி செல்வது
370 - கடத்தி செல்ல தூண்டுவது
376 d - கூட்டு பாலாத்காரம்
509 பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது
354 a பாலியல் துன்புறுத்தல்
354 b பெண் மீது வன்முறை கையாளுதல்
66,67 தகவல் தொழில் நுட்ப சட்டம்
உள்ளிட்ட 13 க்கும் மேலான பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு மூலம் திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று கனிமொழி, திமுக எம்.பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications