சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொழில்நுட்ப கோளாறு.. மாநிலத்தில் பல இடங்களில்... வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்

Google Oneindia Tamil News

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாநிலத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

Recommended Video

    #ELECTION BREAKING முக்கிய தொகுதிகளில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை!

    தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    Polling did not start in Madurai and Chennai due to a technical problem in the voting machine

    பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையங்களில் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் கமல், நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரும் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், மாநிலத்தில் சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில்லை தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை அடுத்துள்ள திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

    சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பல இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. மேலும், சென்னை ஆதம்பாக்கம் ஜி.கே.ஷெட்டி பள்ளியிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

    மேலும், சென்னை தியாகராய நகர் தாமஸ் சாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று தமிழகத்துடன் இணைந்து புதுவை, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 9.11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 0.24%, புதுவை- 0.38%, கேரளா- 3.21%, மேற்கு வங்கம்- 4.88%, அஸ்ஸாம் -0.93% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    English summary
    Polling did not start in Madurai and Chennai due to a technical problem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X