பாலிமார்க்கெட் கணிப்பு.. பிரச்சாரம் முடியும் நாளில் அடித்து தூக்கிய திமுக! பாதாளத்திற்கு சென்ற தவெக
சென்னை: தமிழக அரசியல் களம் கடைசி கட்ட பரபரப்பில் உள்ளது. சட்டமன்றத் தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த மாநிலமும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நிஜக் களத்திற்கு இணையாக 'டிஜிட்டல்' களத்திலும் கணிப்புகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. அதன்படி தற்போது பாலிமார்க்கெட் பக்கத்தில் தமிழக தேர்தல் தொடர்பான கணிப்புகள் வெளியாகி உள்ளன.
கிரிப்டோகரன்சி அடிப்படையிலான சர்வதேச கணிப்புத் தளமான 'பாலிமார்க்கெட்' (Polymarket) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அது என்ன பாலி மார்க்கெட்?
பாலி மார்க்கெட் (Polymarket) என்பது பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் உலகின் மிகப்பெரிய 'கணிப்புச் சந்தை' (Prediction Market) தளமாகும். அதாவது க்ரிப்டோகாயின் சந்தை போன்றது இது. ஆனால் இங்கே பெட்டிங் செய்யலாம்.
இது ஒரு சாதாரண பெட்டிங் தளம் கிடையாது; மாறாக, நிஜ உலகில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் முடிவுகளை மக்கள் தங்கள் அறிவாற்றலைக் கொண்டு கணித்து, அதன் மேல் முதலீடு செய்யும் ஒரு வர்த்தகத் தளமாகும். இங்கு ஒவ்வொரு நிகழ்வும் ஒரு 'ஆம்' (Yes) அல்லது 'இல்லை' (No) என்ற ஒப்பந்தமாக (Contract) மாற்றப்படும்.
ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தால், அந்த ஒப்பந்தத்தின் விலை 100 காசுகளை (Cents) நோக்கி உயரும்; வாய்ப்பு குறைவாக இருந்தால் விலை குறையும். இந்த விலையேற்றமே அந்த நிகழ்வு நடப்பதற்கான 'மக்களின் கணிப்பு சதவீதம்' (Implied Probability) என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, தமிழகத் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறும் என 80 காசுகள் விலை இருந்தால், அந்த கட்சி வெற்றி பெற 80% வாய்ப்பு இருப்பதாகச் சந்தை கருதுகிறது என்று அர்த்தம். துல்லியமான தரவுகள் மற்றும் மக்களின் ஒட்டுமொத்த கருத்துக்களை பிரதிபலிப்பதால், செய்தி ஊடகங்களை விடவும் இந்தத் தளம் பல நேரங்களில் துல்லியமான கணிப்புகளை வழங்குவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது கிரிப்டோகரன்சி மூலம் இயங்குவதாலும், சூதாட்டத் தன்மையைக் கொண்டிருப்பதாலும் பல்வேறு நாடுகளில் சட்டரீதியான விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
திமுகவிற்கே வெற்றி - பாலி மார்க்கெட்
பாலிமார்க்கெட் என்பது வெறும் கருத்துக்கணிப்பு தளம் மட்டுமல்ல; இது பணத்தைப் பணயமாக வைத்து மக்கள் ஒரு நிகழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் வர்த்தகத் தளம். இதன் தற்போதைய நிலவரப்படி, ஆளும் கட்சியான தி.மு.க அசுர வேகத்தில் முன்னேறி வருவது தெரிகிறது.
யார் கையில் எத்தனை 'பர்சன்டேஜ்'?
தி.மு.க: 78% வெற்றி வாய்ப்பு என்று கடந்த வாரம் இருந்தது. இன்று 83 சதவிகிதம் ஆகி உள்ளது.
அ.தி.மு.க: 18% வெற்றி வாய்ப்பு என்று கடந்த வாரம் இருந்தது. இன்று 12 சதவிகிதம் ஆகி உள்ளது.
த.வெ.க: 5% வெற்றி வாய்ப்பு என்று கடந்த வாரம் இருந்தது. இன்று 5 சதவிகிதம் ஆகி உள்ளது.
ஏனைய கட்சிகள்: 1% க்கும் குறைவான வாய்ப்பு
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தி.மு.க-வின் வெற்றிக்கு 'எஸ்' (Yes) என்று பந்தயம் கட்டுபவர்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே போகிறது. ஒரு பங்கின் விலை 83 காசுகளாக வர்த்தகமாவது, மக்கள் மத்தியில் தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு 83% உறுதி என்று டிஜிட்டல் உலகம் நம்புவதைக் காட்டுகிறது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளை உற்று நோக்கினால் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் தெரிகிறது. ஆரம்பத்தில் அ.தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகியவற்றுக்குச் சாதகமாகச் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் நிலைமை தலைகீழாக மாறியது. மார்ச்சில் திமுகவிற்கு சாதகமாக முற்றிலும் மாறியது.
தி.மு.க-வின் கிராஃப் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது, மற்ற கட்சிகளின் பங்குகள் சரிவைச் சந்திக்கத் தொடங்கின. இந்தத் திடீர் எழுச்சி, தற்போதைய ஆளும் தரப்பிற்கு டிஜிட்டல் வர்த்தகர்கள் மத்தியில் இருக்கும் பலமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இப்போது பிரச்சாரம் முடியும் கடைசி நாள் 83% ஆக உள்ளது.
"ஆன்லைன் கணிப்புகள் என்பது மக்களின் தற்போதைய மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி மட்டுமே; அதுவே இறுதித் தீர்ப்பல்ல" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் அமையப்போகும் கூட்டணிகள், கடைசி நேரப் பிரச்சாரங்கள் மற்றும் மக்களின் நேரடி வாக்குகள் எனப் பல காரணிகள் முடிவுகளை மாற்றியமைக்கலாம்.
இருப்பினும், இப்போதைக்கு 'பாலிமார்க்கெட்' திண்ணையில் தி.மு.க-வே 'நம்பர் 1' இடத்தில் கெத்தாக அமர்ந்துள்ளது. டிஜிட்டல் கணிப்பு நிஜமாகுமா அல்லது கடைசி நேரத்தில் ட்விஸ்ட் காத்திருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
-
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
காலரில் என்னங்க இது.. அமைச்சரானதும் வன்னியரசும் இப்படி இறங்கிட்டாரே.. விசிகவிற்கு இது புதுசு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications