என்ன திடீர்ன்னு.. சம்மந்தமே இல்லாமல் ஓபிஎஸ் குறித்து பொன்னார் இப்படி பேசுகிறார்.. ஒன்னும் புரியலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை; திடீர் என்று.. துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் குறித்து பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்னண் சொன்ன விஷயம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தலில் நடந்தது போல நடந்துவிட கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக சார்பாக கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்னண் போட்டியிட உள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் குறித்து பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்னண் சொன்ன விஷயம் ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்னார் அளித்த பேட்டியில், அ.தி.மு.க-பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி, கண்டிப்பாக வெற்றிபெறும். கண்டிப்பாக அதிமுக கூட்டணிதான் இந்த தேர்தலில் வெற்றி கூட்டணியாக இருக்கும் . திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

அதிமுக

அதிமுக

திமுகவின் வாக்குறுதிகள் ஏமாற்று வாக்குறுதிகள். அதிமுக திட்டங்களை முன்கூட்டியே அறிந்து திமுக அறிவித்துள்ளது. அதிமுக இந்த முறையும் கூட்டணியை வலிமையாக அமைக்கும். தே.மு.தி.கவுடன் பேச்சு நடக்கிறது, அந்த கட்சி கட்டாயம் எங்கள் கூட்டணிக்கு வரும். அதன்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்.

மக்கள்

மக்கள்

மக்கள் மத்தியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை மக்கள் நம்புகிறார்கள். மிகப்பெரிய அளவில் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது, என்று பொன். ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். திடீர் பொன்னார் இப்படி ஓ பன்னீர்செல்வம் குறித்து புகழ்ந்து பேசி கருத்து சொல்லி இருப்பது பெரிய வைரலாகி உள்ளது.

 செல்வாக்கு

செல்வாக்கு

ஏன் இவர் திடீரென பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பேசுகிறார்.. தொடர்பே இல்லாமல் திடீரென ஓபிஎஸ் செல்வாக்கு குறித்து பொன்னார் பேச காரணம் என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. இணையத்தில் இது பல விமர்சனங்களை, விவாதங்களை ஏற்படுத்தியது.

என்னாச்சு

என்னாச்சு

ஓ பன்னீர்செல்வத்தை வைத்து பாஜக எதுவும் பிளான் போடுகிறதா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பாஜகவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியதில்.. பொன்னார் கொடுத்த பாதி பேட்டிதான் செய்திகளில் வந்து இருக்கிறது. அதுதான் சர்ச்சைக்கு காரணம்.பொன். ராதாகிருஷ்ணன் ஓபிஎஸ் - இபிஎஸ் என்று இரண்டு அதிமுக தலைவர்கள் குறித்தும் பேசினார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

ஆனால் முதலில் சொன்ன விஷயங்கள் வெளியே வரவில்லை, அதுதான் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது என்று கூறுகிறார்கள். இதைத்தான் இணையத்தில் சர்ச்சையாக்கி பாஜக - அதிமுக இடையே மோதலை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரையும் பாஜக சமமாகவே மதிக்கிறது , சமமாகவே நடத்துகிறது என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+