Pon Radhakrishnan: மோடிக்கு எதிராக ட்வீட் வெளியிட்டாரா பொன்.ராதாகிருஷ்ணன்? ஐயோ.. இது விஷயமே வேற
சென்னை: "மோடி அரசு, உள்ளடக்கிய மேம்பாட்டை எட்டவில்லை, ஒவ்வொரு தனி நபரின் நலன் முக்கியத்துவம் தரப்படாது. இதுதான் நியூ இந்தியா"
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் வெளியானதும், அதிர்ச்சியடைந்துவிட்டனர், பாஜகவினர்.

உடனடியாக தகவல்கள் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பறந்தன. இதையடுத்து அரை மணி நேரத்திற்குள், இந்த ட்வீட்டும் இதுபோன்று வெளியான மேலும் சில ட்வீட்டுகளும் அவசரமாக டெலிட் செய்யப்பட்டன.
டெலிட் செய்யப்பட்ட சில அதிரி புதிரி ட்வீட்டுகளை பாருங்கள்:

இன்று ஒவ்வொருவரும், கண்ணியம் இன்றி & நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். இப்படி ஒரு ட்வீட். அடுத்ததாக இன்னும் மோசம். மோடி அரசில் நடுத்தர வர்க்கத்து மக்களுக்காக பணியாற்றுவது என்பது, குறைந்தபட்ச அஜென்டா. மோடி அரசு வெற்றிகரமாக தோல்வியடைந்துள்ளது. இப்படியெல்லாம் ட்வீட்டுகள் இருந்தன.
இதுபோன்ற ட்வீட்டுகள் எப்படி வெளியாகின? ஒருவேளை, பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? இப்படியெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்தன. இதுபற்றி விசாரித்தபோது, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து, ட்வீட் செய்ய அனுப்பப்படும், தரவுகளில் யாரோ சிலர் வேண்டுமென்றே எடிட் செய்து மாற்றியுள்ளதாகவும், இதை படித்து பார்க்காமல் பொன்.ராதாகிருஷ்ணன் அக்கவுண்ட்டில் இருந்தும் ட்வீட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தவறு தெரிந்ததும், அவை டெலிட் செய்யப்பட்டுள்ளன.
பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்றிருப்பதால், இந்த சம்பவம் குறித்து அவரது கருத்தை அறிய முடியவில்லை.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications