பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லையா? இன்று முதல் ரூ.3000 வாங்கி கொள்ளலாம்.. ரூல்ஸ் என்ன!
சென்னை: பொங்கல் முடிந்தாலும் கூட பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ₹6,936.18 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்கள் பொங்கலைக் கொண்டாட ஏதுவாக சிறப்புப் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. 2.22 கோடி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு ரூ.3000 ரொக்கம் தரப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 8ம் தேதி இந்தப் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ₹6,936.18 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுக்க பொங்கலுக்கு முன்பே பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கிட்டத்தட்ட 90% மக்களுக்குப் பொங்கலுக்கு முன்பே இந்தத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும் பல மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவுக்குப் பொதுமக்கள் பொங்கல் பரிசைப் பெறவில்லை. அதிகபட்சமாகத் தென் சென்னை மாவட்டத்தில் 59,000 அட்டைதாரர்கள் இன்னும் பொங்கல் பரிசைப் பெறவில்லை. அதேபோல தேனியில் 22,000, மதுரையில் 44,000, திருநெல்வேலியில் 32,000 அட்டைதாரர்களும் பொங்கல் பரிசைப் பெறவில்லை. சில மாவட்டங்களில் 10,000க்கும் குறைந்த எண்ணிக்கையில் பொங்கல் பரிசு பெறாமல் இருக்கிறார்கள்.
சுமார் 7.6 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்பு சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே பொங்கல் முடிந்த பிறகும், கூட மீதம் உள்ளோர் பொங்கல் பரிசைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று முதல் அவர்களுக்கும் தங்கள் பொங்கல் பரிசை ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலைகள் ஆகியவை வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள விடுபட்ட மக்கள் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் முடிந்த பிறகு, பொங்கல் தொகுப்பை எப்படி வாங்குவது என்ற சந்தேகம் பலருக்கும் வரும்! அது ரொம்பவே ஈஸி.. உங்கள் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டு இருக்கும். அந்த டோக்கனை ரேஷன் கடைகளில் கொடுத்துப் பொங்கல் தொகுப்பைப் பெறலாம். ஒருவேளை டேக்கன் வழங்கப்படும்போது வீடுகள் பூட்டப்பட்டு இருந்தால் மீண்டும் ரேஷன் கடைக்கே அதை எடுத்துச் சென்றுவிடுவார்கள். அங்குச் சென்று விசாரித்தாலே உங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும்!
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications