அல்வா மாதிரி 5000 ரூபாய்..ரேசன் கார்டுதாரர்களுக்கு அள்ளி தரும் தமிழக அரசு! இவங்களுக்கு மட்டும் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா 5,000 ரூபாயை பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிலருக்கு பொங்கல் பரிசு கிடைக்காது. பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்காது? என்பதை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் முக்கியமாக அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயனடைகின்றனர். 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.

Tamil Nadu govt Pongal Gift dmk

தமிழ்நாடு அரசு

இதன்மூலம் 2 கோடி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தன. முன்னாள் அதிமுக ஆட்சிக் காலத்தில், இந்த பரிசுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் ₹500 வழங்கப்பட்ட நிலையில், பின்னர் ₹1,000 ஆக உயர்த்தப்பட்டது. கடைசியாக 2021ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ₹2,500 ரொக்கமும் பொருட்களும் வழங்கப்பட்டது. ஆனால் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அரசு ரொக்கப் பரிசை வழங்காமல் இருந்தது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

பொங்கல் பரிசு தொகுப்பு

இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் மனதை கவரும் வகையில் தமிழக அரசு ₹5,000 ரொக்கப் பரிசுடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இதற்காக பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கிறது இதற்காக ஏறக்குறைய 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அதற்கான நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதியமைச்சகத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

5000 பொங்கல் பரிசு

5000 ரூபாய் ரொக்க பரிசு மட்டும் அல்லாமல், ஒரு கிலோ பச்சரிசி, வெள்ளம், முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவற்றையும் வேட்டி, சேலை ஆகியவற்றையும் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன. தற்போது ரேசன் கார்டில், முன்னுரிமை அட்டை (அந்தியோதயா அன்ன யோஜனா - அரிசி அட்டை), முன்னுரிமையற்ற அரிசி அட்டை, முன்னுரிமையற்ற சர்க்கரை அட்டை, பொருளில்லா ரேஷன் அட்டை (Non-commodity Card) ஆகிவை உள்ளனர்.

யாருக்கு கிடைக்கும்?

முன்னுரிமை அட்டை (அந்தியோதயா அன்ன யோஜனா - அரிசி அட்டை), முன்னுரிமையற்ற அரிசி அட்டை, முன்னுரிமையற்ற சர்க்கரை அட்டை ஆகியவற்றுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பரிசும் கிடைக்கும். ஆனால், பொருளில்லா ரேஷன் அட்டை வெறும் அடையாள அட்டைகளாக மட்டுமே இருக்கும். எனவே, இந்த வகையான அட்டை வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை தேர்தலைக் கருத்தில் கொண்டு அனைத்து வகை ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமென்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+