ரூ.1000 + பொங்கல் தொகுப்பு.. ஜன 10 முதல் விநியோகம்! ரேஷனில் பெறுவது எப்படி? முக்கிய அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எப்படி பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000 ரொக்கத்தை பெற வேண்டும் என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை என்பது வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் என்பது ரேஷன் கடைகள் மூலம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கடந்த 2ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
இதுமட்டுமின்றி ரூ.1000 ரொக்கப்பணம் என்பது வழங்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகைக்கான டோக்கன் விநியோகம் என்பது நாளை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 9ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை பெறும் மக்களுக்கு ரேஷன் பணியாளர்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 பெறும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன்படி பொதுமக்கள் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று அதனை பெற்று கொள்ளலாம். ஒருவேளை டோக்கன் வாங்க தவறியவர்கள் வரும் 14ம் தேதி நேரடியாக ரேஷன் கடை சென்று விபரங்களை வழங்கி ரூ.1000 + பொங்கல் தொகுப்பு வாங்கி கொள்ளலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications