Pongal memes.. இதை மாடுனு நம்ப வைக்கறதுக்குள்ள.. நான் பட்ட அவஸ்தை இருக்கே.. கலக்கல் மீம்ஸ்
சென்னை: ஒவ்வொரு ஆண்டை போலவும் இந்த ஆண்டும் நமக்கு குபீர் கிளப்பும் வகையில் இருந்த வாசல்களை அலங்கரித்த கோலங்கள் இப்போது இணையத்தையும் தெறிக்க விடுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மொத்தம் 3 நாட்களுக்குக் கொண்டாடப்படுவது வழக்கம். முதல் நாள் பொங்கல் விழாவில் சூரியனுக்கு பொங்கல் படைத்துக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல 2ஆம் நாள் மாட்டுப் பொங்கலும், மூன்றாம் நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொங்கலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாடே டென்ஷன் ஆகும் கோலங்கள்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாட்களில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கலர் கலராக கோலங்கள் அலங்கரிக்கும். அதுவும் குறிப்பாக மாட்டுப் பொங்கல் அன்று அனைத்து வீட்டு வாசல் கோலங்களிலும் மாடு கட்டாயம் இருக்கும். ஆனால், சில சமயம் என்ன பிரச்சினை என்றால் அது மாடு என்று கூறினால் மாடே கடிக்க வந்துவிடும் அளவுக்கு சில கோலங்கள் அமைந்துவிடும்

மாடா இல்லை ஆனந்தராஜா
இப்படி ஒவ்வொரு அண்டும் குபீர் கிளப்பிய கோலங்கள் தான், அந்த வாரம் முழுக்க இணையத்தைக் கலக்கும். அப்படி தான் இந்த ஆண்டும் மாடே டென்சன் ஆகும் அளவுக்கு சில கோலங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது. இந்த கோலத்தில் இருப்பது மாடா இல்லை ஆனந்தராஜா என்பது பார்க்கும் அனைவருக்கும் டவுட் தான்.

அந்த வலி இருக்கே
தனது வீட்டின் முன்பு இருப்பது மாடு தான் என்பதை நிரூபிக்க அந்த வீட்டில் வசிக்கும் ஆண்கள் படும் பாடே பெரும் பாடு தான்.

சூனியம்
ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்றால் ரொம்ப மந்திரம் எல்லாம் தெரிந்து இருக்கத் தேவையில்லை. உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் கோல டப்பாவை கொடுத்து யாருக்குச் சூனியம் வைக்க வேண்டுமோ அந்த வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்கிற ரேஞ்சில் இருக்கிறது இந்த மீம்.

காப்பற்ற போவது யார்
பீட்டாவிடம் இருந்து போராடிக் காத்த மாட்டைக் கோலங்களில் இருந்து காப்பாற்றப்போவது யார் என நமது புரட்சி போராட்டம் பிரபு மாதிரி கேள்வி எழுப்புகிறது இந்த மீம்

வடிவேலு
சில கோலங்களைப் பார்த்தாலே போதும், அப்படியொரு கோலம் தான் இது. வடிவேலுவின் ரியாக்ஷனே இதில் அத்தனையும் சொல்லிவிடும்

என்னவா இருக்கும்
கோலத்தில் மாட்டை வரைய வேண்டும் எனத் தொடங்கி, இடையில் எதோ ஒரு ஞாபகத்தில் அதை வேறு ஒரு விலங்காக மாற்றிவிட்டார்கள் போல!

கோலம்
டிஆர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் இது கலக்கான கோலம். காம்பஸை வைத்து வரைந்த கோலம்.. பக்காவான கோலம், பல கலர்களை கொண்ட கோலம்.. கோடு போட்டு வரையப்பட்ட கோலம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications