பொங்கல் அதுவுமா.. உ.பிக்கு திருப்பிவிடப்பட்ட 15 மேஜர் ரயில்கள்.. தமிழ்நாட்டிற்கு நேர்ந்த அநீதி!
சென்னை: பொங்கலுக்கு மக்கள் பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருக்கும் நிலையில், இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக, மகா கும்பமேளா 2025 க்கான கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தென்னிந்தியாவில் ரயில் சேவைகள் பல தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு உத்தர பிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.
பொங்கல் விடுமுறைக்காக பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில்.. சென்னையின் எல்லா நுழைவாயில்களும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறியது.

நேற்று மாலையில் இருந்து சென்னையின் எல்லா நுழைவு வாயிலிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கியமாக சென்னையின் ஜிஎஸ்டி சாலை அப்படியே போக்குவரத்து நெரிசல் காரணமாக முடங்கியது. மாலை 5 மணிக்கு சிட்டியை விட்டு வெளியே செல்லும் வாகனங்கள் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் வடபழனி தொடங்கி கடும் நெரிசல் காணப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு வெளியே செல்வதால் தாம்பரம், செங்கல்பட்டு, ஈசிஆர் சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறி உள்ளது. எல்லா வருடமும்.. எல்லா பண்டிகை தினங்களுக்கும் நடப்பது போலவே.. இந்த முறையும் சென்னையை இணைக்கும் சாலைகள் மூச்சுத்திணற தொடங்கி உள்ளன.
விடுமுறை தினத்திற்காக பலர் ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சென்னையின் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலால் முடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் பொங்கலுக்கு 10-15 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட விடுமுறை என்பதால் பல குடும்பங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக, மகா கும்பமேளா 2025 க்கான கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தென்னிந்தியாவில் ரயில் சேவைகள் பல தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு உத்தர பிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.
சரியாக பொங்கல் நேரத்தில் தமிழகத்தில் இருந்து 15 ரயில் ரேக்குகள் வட இந்தியாவிற்கு திருப்பி விடப்படுகின்றன. உத்தர பிரதேசத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ரேக்கிலும், 20 பெட்டிகள் மற்றும் இரண்டு இன்ஜின்கள் இடம்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில நாட்களில் தென்னக ரயில்வேயில் இருந்து தொடங்கி மத்திய ரயில்வேக்கு அனுப்பப்படும்.
தெற்கு ரயில்வே உள் ஆவணங்களின்படி மகா கும்பமேளா 2025விற்காக இது பயன்படுத்தப்படும். இந்த வாரம் சென்னை சென்ட்ரல், தாம்பரம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி டிப்போக்களில் ரேக்குகள் அசெம்பிள் செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள ரயில் போக்குவரத்து மேலாளர்கள், "முன்னுரிமையின் அடிப்படையில்" பெட்டிகளை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்க்கு உடனடியாக அனுப்புவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் பல கோச்களும் தற்போது இயங்கி வரும் ரயில்களில் இருந்து நீக்கப்பட உள்ளன. அதன்படி தாம்பரம்-திருச்சி மற்றும் தாம்பரம்-கோவை போன்ற முக்கிய ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் அகற்றப்பட உள்ளது.
தாம்பரம்-ராமேஸ்வரம் ரயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் அல்லது அதிக கூட்டம் உள்ள அரசு பேருந்துகளை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இந்து பக்தகோடிகள் பலர் உள்ளனர்.
மூன்று கும்பமேளா சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படுகின்றன, இது சென்னை மட்டுமின்றி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய தென் மாவட்டங்களை நேரடியாக கயாவுடன் இணைக்கிறது. இந்த ரயில்கள் பிப்ரவரி இறுதி வரை இயக்கப்படும். மேளா இன்று ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லாமல் எதிர் திசையில் செல்வதால் தமிழ்நாட்டிற்கு உள்ளே பயணம் செய்பவர்களுக்கு பொங்கல் காலத்தில் இந்த ரயில்கள் சுத்தமாக பயன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications