Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகல் கொள்ளையா இருக்கே! பட்ஜெட்டுக்கு ஆப்பு வைக்குதா ஆம்னி பஸ்கள்? இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கத்தை விட அதிக கட்டணம் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் அறிவித்துள்ளதோடு இதற்கான உதவி எண்களையும் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க வேண்டும்.

Pongal 2026 Tamil Nadu Omni Bus

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆணையரகம் மற்றும் புகார் எண்கள் விபரம்:

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 99442 53404

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 97905 50052

இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394

இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 91235 93971

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825

துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423

துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 80569 40040

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865" என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+