நீங்க வேற.. எடப்பாடி பழனிச்சாமியை "அவர்" மனசார பாராட்டுவார்.. மணிகண்டன் இப்படிச் சொல்றாரே!
சென்னை: தற்போதைய அரசியல் சூழலில் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா மனசார பாராட்டுவார் என பாமகவிலிருந்து அதிமுகவில் இணைந்தவரும் அரசியல் விமர்சகருமான பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவை நிச்சயம் கைப்பற்றுவேன் என்றும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
பின்னர் அதிமுகவில் இணைய பல முயற்சிகள் எடுத்தும் அவை எதுவும் கைக் கூடவில்லை. இதையடுத்து தான் அரசியலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக சசிகலா அறிவித்திருந்தார்.

பொதுச் செயலாளர்
அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவர் அமமுகவுக்கும் ஆதரவு அளிக்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அதிமுக நிலை எப்படி இருக்கும் என்பதை பொருத்து ஒரு முடிவை சசிகலா எடுப்பார் என தெரியவந்தது.

அதிமுக
மேலும் தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றவே சசிகலா தற்போது பதுங்குவது போல் பதுங்கியுள்ளார் எனறெல்லாம் பேசினர். இந்த நிலையில் அதிமுக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறுகையில் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களை பார்த்துவிட்டே சசிகலா அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி
நிச்சயமாக அவர் அதிமுகவுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அணு அளவிலும் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்காது. தற்போதாய சூழலில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு சசிகலா கட்சியில் இணைந்தால் எந்த குழப்பமும் ஏற்படாது. ஆனால் தனது அதிகாரத்தை காட்ட சசிகலா நினைத்தால் குழப்பம்தான் வரும்.

விமர்சிக்கவில்லை
இதுவரை சசிகலாவை முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் விமர்சித்தனரே தவிர எடப்பாடி பழனிச்சாணி விமர்சிக்கவே இல்லை. தற்போதைய அரசியல் சூழலில் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி பாராட்டுவார் எனநான் நம்புகிறேன் என பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications