பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ஆயிரம் ரூ.5 லட்சமாகும்.. ஆண் குழந்தைகளுக்கான வரப்பிரசாதம்! ரூ.500 போதும்
சென்னை: ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் திட்டத்தில் எப்போது பணம் கட்ட வேண்டும்? இது யாருக்கான திட்டம் தெரியுமா? பொன்மகன் திட்டத்தில் அதிகம் பேர் ஆர்வம் காட்டுவற்கு என்ன காரணம் தெரியுமா? ஆண் குழந்தைகள் மட்டும் இந்த திட்டத்தில் இணையலாமா? இதில் கடன் வசதிகள் உண்டா? இதிலுள்ள ஸ்பெஷாலிட்டியை பாருங்கள்.
இந்த திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டமாகும்.. ஆண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டமாகும். கடந்த செப்டம்பர் 2015-ல் தொடங்கப்பட்ட, அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும்.

சிறப்பு திட்டம்: இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். 8.5 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது. இதன் முதிர்வு காலம் மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும். குறைந்தது 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். அதற்கு பிறகு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் முதிர்வோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பிப்பு செய்யும்போது, அந்த 5 ஆண்டு காலத்துக்கும் உண்டான வட்டி சேர்த்து வழங்கப்படும்.
7 சதவீதத்துக்கும் குறையாமல்தான் வட்டியே வழங்கப்படுகிறது. இப்போது வட்டி விகிதம் 1.1% குறைவாகவே உள்ளது. ஒருவேளை, ஆண்குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டால், அந்த குழந்தை 18 வயதை பூர்த்தியடைந்திருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு பணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அவரது பாதுகாவலர் பணத்தை பெறலாம்.
வரிச்சலுகை: குறைந்தபட்ச முதலீடு அல்லது வைப்புத் தொகை ரூ.100ஆக உள்ளதுடன், நிலையான வட்டியும் விகிதத்தையும் இந்த திட்டம் வழங்குகிறது, அப்படி வழங்கப்படும் வட்டிவிகிதமானது, மற்ற சிறு சேமிப்பு திட்டங்களால் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட சற்று அதிகமாகும். வருமான வரிச்சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகைகளைப் பெறலாம்.
ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு இந்த திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.. பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்ட கணக்கில் செலுத்தப்படும் வட்டிக்கும் வரி கிடையாது.
முழுத்தொகை: இந்த திட்டத்தில், பிபிஎன்எஸ் கணக்கை ஆரம்பித்து 7வது நிதியாண்டிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்ப பெறலாம். ஆண் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததுமே வட்டி உட்பட முழுத்தொகையும் ஆண் குழந்தைக்கு வழங்கப்பட்டுவிடும். குறைந்தபட்ச வயது வரம்பு கிடையாது.
ஒரு நிதியாண்டில் ஒரு முறையாவது பணம் செலுத்திவிட வேண்டும். உதாரணத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி இந்த நிதியாண்டில் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், மறு நிதியாண்டின் மார்ச் 31க்குள் அடுத்த தவணையை செலுத்த வேண்டும். இதில் தவறினால், அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும்
யாருக்கான திட்டம்: பொன்மகன் சேமிப்புத் திட்டம் என்றாலும், இது ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் PPF திட்டம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் இதில் இணையலாம்.. வயது வரம்போ, கல்வித் தகுதியோ கிடையாது..
ஆனால் இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது.
கடன் வசதி உண்டா: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் வசதியும் உண்டு.. இதற்கு கணக்குத் தொடங்கி 3வது நிதியாண்டு தொடங்கியிருக்க வேண்டும். எனவே, 2வது நிதியாண்டு முடிவில் உள்ள தொகையின் 25% மட்டும்தான் கடனாகப் பெற முடியும்.. அப்படிப் பெறும் கடனை 36 மாதங்களுக்கு முன்பே அடைத்துவிட்டால், 1 சதவீதம் மட்டும்தான் வட்டியாக வசூலிக்கப்படும். அதற்கு மேல் 6 சதவீதம் வட்டி வரலாம்.
ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் எடுக்க முடியும், 2வது கடன் எடுக்கும் பட்சத்தில் முதல் கடன் முழுமையாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், இடையில் பணம் எதுவும் கடனாக பெறாமல் இருந்தால், பணத்தை நடுநடுவே எடுக்காமல் இருந்தால், முழு சேமிப்புப் பலனையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
பொன்மகன் திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்:
- பொன்மகன் திட்டத்துக்கான விண்ணப்ப படிவம்
- ஆண் குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வருமான சான்றிதழ்
- ஆண் குழந்தையின் நடப்பு கல்வியாண்டின் பள்ளி சான்றிதழ்
- ஆண் குழந்தையின் வங்கி கணக்கு விவரங்கள்
- இருப்பிட ஆதாரம் (வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை)
சபாஷ் திட்டம்: பெண் குழந்தைகளுக்கான திட்டமாக விளங்கி கொண்டிருக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை போலவே, ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும்கூட, தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திட்டம் வேண்டும் என்று அஞ்சலகங்களை அணுகி கோரிக்கை வைத்தபடியே இருந்திருக்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், பொதுமக்களின் நன்மையை கருதி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications