பொன்மகன், செல்வமகள் சேமிப்பு.. அஞ்சலகத்தின் 2 சூப்பர் திட்டங்களுக்கும் முக்கிய வித்தியாசம் இதுதான்
சென்னை: தமிழகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலப் படிப்பிற்காகவும், திருமணச் செலவுக்காகவும் அஞ்சலகம் இரண்டு அருமையான சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்" மற்றும் ஆண் குழந்தைகளுக்காகக் கொண்டு வரப்பட்ட "பொன்மகள் சேமிப்புத் திட்டம்" ஆகிய இரண்டுமே மத்திய அரசால் நடத்தப்படுபவை என்பதால், நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு நூறு விழுக்காடு முழு பாதுகாப்பு உண்டு.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை பொறுத்தவரை, பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது. இதில் குழந்தை பிறந்ததில் இருந்து பத்து வயது முடிவதற்குள் கணக்கைத் தொடங்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். அதே நேரத்தில், பொன்மகள் திட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது. இதில் சேருவதற்குக் குறைந்தபட்ச வயது வரம்பு என்று எதுவும் இல்லை. பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குப் பெற்றோர் கணக்குத் தொடங்கலாம், பத்து வயது தாண்டிய சிறுவர்கள் தாங்களாகவே நேரடியாகக் கணக்குத் தொடங்கிக் கொள்ளும் வசதியும் உண்டு.

பொன்மகன் சேமிப்பு திட்டம்
முதலீட்டு தொகையைப் பொறுத்தவரை, செல்வமகள் திட்டத்தில் ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆனால், பொன்மகள் திட்டத்தில் ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் ஐந்நூறு ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
அதேபோல கால அளவை ஒப்பிடும் போது, செல்வமகள் திட்டம் கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 21 ஆண்டுகள் வரை நீடிக்கும், ஆனால் நீங்கள் பதினைந்து ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. பொன்மகள் திட்டத்தின் மொத்தக் கால அளவே பதினைந்து ஆண்டுகள் மட்டும்தான். அதன்பிறகும் நீங்கள் சேமிப்பைத் தொடர விரும்பினால், 5 வருடங்கள் என்ற கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
ஸ்பெஷலான விஷயம் இதுதான்
அவசர தேவைகளுக்குப் பணம் எடுக்கும் வசதியிலும் சில மாற்றங்கள் உள்ளன. செல்வமகள் திட்டத்தில் பெண் குழந்தைக்குப் பதினெட்டு வயது நிறைந்த பிறகு, அவரின் கல்லூரிப் படிப்புச் செலவிற்காக மொத்தச் சேமிப்பில் இருந்து பாதிப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இதில் கடன் வாங்கும் வசதி கிடையாது. பொன்மகள் திட்டத்தில் கணக்குத் தொடங்கி 7 வருடம் முடிந்த பிறகு, அவசரத் தேவைக்காகச் சேமிப்புத் தொகையில் இருந்து பாதிப் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தில் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்து அவசரத்திற்குக் கடன் பெறும் கூடுதல் வசதியும் உண்டு. 2 திட்டங்களிலுமே நீங்கள் கட்டும் பணத்திற்கு வருமான வரி விலக்கு கிடைப்பதுடன், திட்டம் முடிந்து வட்டியோடு உங்களுக்குக் கிடைக்கும் மொத்தப் பணத்திற்கும் ஒரு ரூபாய் கூட வரி கட்டத் தேவை இல்லை என்பது மிகப்பெரிய ஸ்பெஷலான விஷயமாகும்.
வாகன இன்சூரன்ஸ் உண்டு
இப்போது தபால் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், அஞ்சலக வங்கிச் செயலி மூலமாகவே உங்கள் செல்போன் போன் வழியே செல்வமகள் மற்றும் பொன்மகள் கணக்குகளுக்கு ஆன்லைனில் எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
மேலும் இந்த ஆப் வெறும் 555 அல்லது 755 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பத்து லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீடு எடுத்துக்கொள்ளும் புதிய வசதியையும் அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உங்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே இன்சூரன்ஸ் செய்து கொள்ள முடியும்...!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications