பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணையை தொடங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இறுதி விசாரணை துவங்கியுள்ளது.
கடந்த 1996-2001 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பொறுப்பாக மாட்டார் எனவும் வாதிட்டார்.
மேலும், ஏற்கனவே 70 சதவீதம் விசாரணை முடிக்கப்பட்ட வழக்கில் மீதி விசாரணையை மேற்கொண்டதாகவும், ஐந்து நாட்களில் தீர்ப்பளிக்கப்படவில்லை எனவும் வேலூர் நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்த மனுவை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா? அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமனுக்கும், பொன்முடி தரப்பு மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோவுக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும் என்றால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது என்றும் ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications