குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி
சென்னை: ஆன்மிக சொற்பொழிவாளரும், தமிழ் ஆர்வலருமான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இயங்கி வரும் ''திருவண்ணாமலை ஆதினம்'' மடத்தின் தலைவராக இருப்பவர் பொன்னம்பல அடிகளார். தமிழகமெங்கும் சமய நல்லிணக்க நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் தமிழ் ஆர்வலரும் கூட. தமிழ் மொழிக்காக, சமயத்துக்காக, சமுதாயத்துக்காக என பல்வேறு வழிகளில் சேவையாற்றி வரும் பொன்னம்பல அடிகளார் திருக்குறள் பேரவை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக திருவண்ணாமலை ஆதின வட்டாரத்தில் கேட்டபோது, ஐயாவுக்கு ஒன்றுமில்லை, சின்ன செக் அப் தான் என்பதோடு முடித்துக்கொண்டனர். மேற்கொண்டு எதுவும் கூறவில்லை.
பொன்னம்பல அடிகளாருக்கு தமிழ்ச்செம்மல் விருது, முத்தமிழ் பேரறிஞர் விருது, மனித நேய பண்பாளர் விருது என பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், மதங்களை கடந்து அவருக்கு உள்ள நண்பர்கள் என அனைவரும் காரைக்குடி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications