கேப்டன் விஜயகாந்தை மட்டும் நான் நேரில் பார்த்தால் செத்துடுவேன்.. நடிகர் பொன்னம்பலம் உருக்கம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்தை நான் நேரில் பார்த்தால் செத்துவிடுவேன் என வில்லன் நடிகர் பொன்னம்பலம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம். இவர் விஜயகாந்துடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். அது போல் ரஜினி, கமல், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் வயது முதிர்வு காரணமாக வில்லன் கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திரைப்படங்களில் வில்லனாக பார்த்து பிக்பாஸில் இவரது உண்மையான கேரக்டரை பார்த்த மக்கள் இவருக்கு ரசிகர்களாகிவிட்டனர்.

4 மனைவிகள்
இவருடைய தந்தைக்கு 4 மனைவிகள் என்றும் தனது தாய் 4ஆவது மனைவி என்றும் தான் அவருக்கு 7ஆவது மகன், தனக்கு பிறகு 4 பேர் பிறந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சிறு வயது முதலே பெரிய குடும்பத்தில் பாசப் பிணைப்புடன் வளர்ந்தவன் என பிக்பாஸில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடி
அவர் கடுமையான நிதி நெருக்கடியிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து தற்போது நலமாகவே இருக்கிறார். இவருக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் உதவி செய்தது குறித்து அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி.

இதய நோய்
நான் இன்னும் அவரை நேராக பார்க்கவில்லை. பார்த்தால் செத்துவிட்டேன். எனக்கு கொஞ்ச நாட்களாக இதய நோய், சிறுநீரக நோய் இருக்கிறது. அவரின் தற்போதைய தோற்றத்தை பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல அளவு கடந்த பாசம் வைத்துவிட்டு அவருக்கு உடல்நிலை மோசமாக இருக்கும் போது நம்மால் அவரை பார்க்க முடியாது.

விஜயகாந்த்
அதனால்தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் போய் சந்திக்கவே இல்லை. அவர் மட்டும் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் அவர்தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார் என கூறியிருந்தார். எனக்கு சரத்குமார், பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தனுஷ் உள்ளிட்டோர் நிறைய உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் எனக்கு என்றுமே மகான்கள் என்று்ம பொன்னம்பலம் கூறினார்.

விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்
விஜயகாந்திற்கு சர்க்கரை நோய் அதிகரித்துவிடடு கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவரது வலது காலில் இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. அவ்வப்போது விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு தைராய்டு பாதிப்பு ஏற்பட்டு சரிவர பேச இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications