பத்திர பதிவு செய்த ஆவணம்.. சின்ன ஆசையால் சிறையில் பொன்னேரி சார் பதிவாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை ஆவணத்தை வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்-பதிவாளர் உள்பட 3 பேரை ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பத்திர பதிவு செய்த பின் பத்திர ஆவணங்களை பெற வேண்டுமென்றால் சில சார்பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. எனினும் அப்பாவி மக்கள் அல்லது சாமானிய மக்களை குறிவைத்து ஒரு சிலர் லஞ்சம் வாங்குவது இன்றும் தொடர்கிறது. அப்படிப்பட்டவர்கள் லஞ்சம் கொடுக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் அவர்களை பொறிவைத்து பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அப்படித்தான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சார்பதிவாளர் உட்பட சிலர் சிக்கி உள்ளனர்.

Ponneri Sub-Registrar arrested

சென்னை அரும்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டுமனைகளை விலைக்கு வாங்கியுள்ளார். , அவற்றை பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக சார்-பதிவாளர் சங்கரை அணுகினாராம் . அப்போது, பத்திரத்தை வழங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என சார்-பதிவாளர் சங்கர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேரில் சென்று புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆடி அமாவாசையையொட்டி பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். போலீசார் பொதுமக்களோடு பொதுமக்களாக கலந்து கொண்டு கண்காணித்தனர்.

அப்போது நடராஜன் லஞ்சமாக கொடுத்த ரூ.15 ஆயிரத்தை சார்-பதிவாளர் சங்கர், பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ் மற்றும் எழுத்தரின் உதவியாளர் நித்தியா ஆகியோர் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கைதான 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டதால் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+