நேற்றுதான் தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினாரே! மறுநாளே விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாரே! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழுவை நேற்று கூட்டியிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

மொத்தம் 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

தீர்மானங்கள்: நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடுத்து என்ன?: இதை தொடர்ந்து கட்சி ரீதியாக பேட்டிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விஜய் நடைபயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அவரின் அரசியல் அதிரடியை எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நடிகர் விஜய்.. அரசியல் பணிகளில் பெரிதாக கவனம் செலுத்தாமல் தனது கடைசி படத்திற்கான பணிகளில் ஈடுபட தொடங்க உள்ளாராம். அதன்படி 69வது படத்திற்கான பணிகளை நடிகர் விஜய் தொடங்கிவிட்டாராம். இன்றுதான் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

பெரிதாக இப்போதைக்கு அவர் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. இப்போதே அரசியல் செய்தால் தான் விஜயால் கொஞ்சம் அரசியல் மாற்றத்தை தர முடியும். ஆனால் அவர் சினிமாவில் தொடர்ந்து பிசியாவதால் அதற்கு வாய்ப்பு குறைவு.

இந்த மாநாட்டை தொடர்ந்து கட்சி ரீதியாக பேட்டிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவரின் அரசியல் அதிரடியை எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+