தனியார் நிறுவன 'ஹெச்ஆர்'க்கு கொரோனா.. தாயம் விளையாடியவருக்கும் பரவியது.. பூந்தமல்லிக்கு சீல்
சென்னை: சென்னை அருகே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூவிருந்தவல்லியில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், தாயம் விளையாடும்போது, இப்படி நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பூவிருந்தவல்லியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 39 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தாயம்
இந்தநிலையில் கொரோனா பாதித்த நபரின் வீட்டிற்கு தாயக்கட்டை விளையாடச் சென்றதால் எதிர் வீட்டுக்காரருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில், 39 வயது இளைஞருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து மர்மம் விலகவில்லை.

மர்மம்
இதுகுறித்து சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டையில் உள்ள, கார் உதிரி பாகம் தயாரிக்கும், தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்தவர் அந்த இளைஞர் என தெரியவந்துள்ளது.

அலுவலகம்
அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்பதும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 26 பேரும் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த நபர் வசித்து வந்த வீட்டை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.

இருங்காட்டுக்கோட்டை
பூவிருந்தவல்லி இளைஞருடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில், பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஆலை அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை தொழிற்பேட்டை பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

சீனர்கள்
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சீனர்கள் சிலர் அந்த ஆலைக்கு, சென்றதாகவும், அவர்களுக்கு ஆலையை சுற்றிக் காட்டியதாகவும், அப்போதுதான் 39 வயது நபருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த தகவல் குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

பக்கத்து வீடுகள்
சோதனைகளின் விளைவாக பூவிருந்தவல்லியில் அந்த இளைஞரின் வீட்டை சுற்றிலும், வசிக்கும் சுமார் 7 குடும்பங்கள், தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டும், இப்படி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சேர்ந்து தாயம் உள்ளிட்டவை விளையாடுவது எப்படி பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications