அடுத்த விக்கெட்.. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இல்லை.. திடீரென அறிவித்த பூவை ஜெகன்மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக உடான கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறிவிட்டதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுடன் அதிமுக உடனான கூட்டணி முடிவடைந்துவிட்டதாக கூறிய பூவை ஜெகன்மூர்த்தி, தற்போது புரட்சி பாரதம் கட்சி யாரோடும் கூட்டணியில் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து புரட்சி பாரதம் கட்சி போட்டியிட்டது. கேவி குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு துரோகம் செய்தது. அதனால் தான் ஆட்சியை இழந்தது.

Poovai Jagan Moorthy

கடந்த ஆட்சியை போல் அல்லாமல் தவெக அரசு, ஆதிதிராவிடர நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக இந்த துறைக்கே செலவிட வேண்டும். நாங்கள் இதுவரை முதல்வர் விஜய்யை சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் தயார் செய்துள்ள நிழல் நிதிநிலை அறிக்கையை முதல்வரை சந்தித்து வழங்க முயற்சி எடுப்போம்.

அதேபோல் மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, அதிமுக உடனான கூட்டணியில் இப்போது புரட்சி பாரதம் கட்சி இல்லை. அதிமுக உடனான கூட்டணி சட்டசபைத் தேர்தலுக்கு பின் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று தெரிவித்தார்.

இதன்பின் உள்ளாட்சித் தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பூவை ஜெகன்மூர்த்தி, இன்னும் காலம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் போது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக உடனான கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகளும் விலகி வருகின்றன.

அதேபோல் அதிமுக நிர்வாகிகளும் விலகி வருகின்றனர். இப்படியான சூழலில் புரட்சி பாரதம் கட்சியும் அதிமுக உடனான கூட்டணியில் இல்லை என்று அறிவித்திருப்பது விவாதமாகி இருக்கிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த கட்சி எந்தக் கூட்டணியில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+