Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்எல்சியால் பாதரசம் நிறைந்த நீர்.. பூவுலகின் நண்பர்கள் ஆய்வில் ஷாக்! பசுமை தீர்ப்பாயம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து 'மின்சாரத்தின் இருண்ட முகம்' என்கிற ஆய்வறிக்கையை பூவுலகின் நண்பர்கள் குழு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆய்வறிக்கையை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது.

என்எல்சி தொடர்பான பிரச்னைகள் சமீப நாட்களாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடங்கி, நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றம், இழப்பீடு உள்ளிட்டவைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இதனால் ஏற்படும் மாசு பிரச்னை மற்றொரு சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அதாவது, நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் என்எல்சி காரணமாக நீர், நிலம் மற்றும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது.

Poovulagin nanbargal The report issued by the committee has been heard by the Southern National Green Tribunal

குறிப்பாக ஒரு கிராமத்தில் மட்டும் இயல்பான அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருக்கிறது என ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில், "நாங்கள் மந்தன் அத்யாயன் கேந்திரா எனும் அமைப்புடன் இணைந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் ஐ.டி.பி.சி.ல் நிறுவனங்களின் அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடு குறித்த ஆய்வை மேற்கொண்டோம். கடந்த 2022 முதல் 2023ம் ஆண்டு வரை நான்கு கட்டங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டோம்.

இதன் அறிக்கைதான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே வெளியான அதிகாரப்பூர்வ அமைப்புகளின் ஆய்வறிக்கைகள், ஊடக மற்றும் பத்திரிகை செய்திகள் ஆராயப்பட்டன. ஆதண்டார்கொல்லை, அகிலாண்டகங்காபுரம், கல்லுக்குழி, தென்குத்து, வானதிராயபுரம், வடக்குவெள்ளூர், தொப்பலிகுப்பம், கரிக்குப்பம், புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் 121 வீடுகளில் நேரடியாக சென்று மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தோம்.

37 இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட Chennai Mettex Lab Pvt Ltd மற்றும் Tamilnadu Test House Pvt Ltd எனும் இரண்டு பரிசோதனை நிறுவனங்களில் அவை சோதனை செய்யப்பட்டன. நீர், மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் என்.எல்.சி.யைச் சுற்றி ஆய்வு செய்யப்பட்ட 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருந்தது. 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தது.

குறிப்பாக என்.எல்.சி.யின் ஒன்றாவது சுரங்கத்திற்கு அருகிலுள்ள வடக்குவெள்ளூர் கிராமத்தின் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகம் பாதரசம் கலந்திருந்தது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுப்படி "பாதரசம் மனித குலத்திற்குத் தெரிந்த மிகவும் நச்சான பொருள் மற்றும் அதை உட்கொள்வது ஆபத்தானது மற்றும் தோல் வழியாக உறிஞ்சப்பட்டால் தீங்கு விளைவிக்கக்கூடியது. இது நரம்பு மண்டலம், செரிமான மற்றும் சுவாச அமைப்புகள் மற்றும் சிறுநீரகங்களில் தீங்கு உண்டாகும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்".

என்.எல்.சியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களுக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் வசிக்கும் 101 வீடுகளில் நடத்தப்பட்ட நேர்காணல் முறையிலான ஆய்வில் 89 வீடுகளில் வீட்டில் யாரோ ஒருவருக்கு சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத் திணறல் சார்ந்த நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 66 வீடுகளில் இருப்போர் குடிநீரின் தரம் சீர்கெட்டுள்ளதாகவும், 59 வீடுகளில் வேளாண் பாசனத்திற்கு வரும் தண்ணீரின் தரம் மோசடைந்திருப்பதாகவும் இதில் 53 பேர் இதற்குக் காரணம் என்.எல்.சியின் கழிவுகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர்" என்று விரிவாக கூறியிருந்தது.

ஏற்கெனவே என்எல்சி தொடர்பான பிரச்னைகள் கொழுந்துவிட்ட எரிந்துக்கொண்டிருந்த நிலையில் இந்த ஆய்வறிக்கை பெரும் கவனம் ஈர்த்தது. ஆய்வறிக்கை வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்கள் ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

விசாரணையில் "ஆய்வறிக்கை சொல்லும் தரவுகள் தொடர்புடைய அமைப்புகளான NLC நிர்வாகம், மத்திய - மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+