பொய் பிரச்சாரம்.. பாஜக அண்ணாமலையை கைது செய்ங்க.. தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை: பாஜகவின் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி அலுவலகத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே பாஜக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தாக்கக் கூடும்
ஏனென்றால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நம்மை தாக்கக் கூடும் என அந்த ஆடியோவில் உள்ளது. மதக் கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுகிற அண்ணாமலையை தமிழக அரசும் காவல் துறையும் வேடிக்கை பார்க்கக் கூடாது. காவல் துறை அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை ஆடியோ
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதில், பாப்புலர் ஃப்ரண்ட் அப் இந்தியா அமைப்பு (Popular front of india) தடை செய்யப்படலாம் என்றும் அதனால் பாஜக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளா
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த சுபைர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேலமுரியில் ஆர்எஸ்எஸ் முன்னாள் பிரமுகர் சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்த கொலையால் கேரளாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா
இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று இந்தியாவில் சில இடங்களில் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications