கன்டெண்ட் தேடும் இடமா இது? யூட்யூப் சேனல்களை விளாசிய விஜே சித்து! பிஜிலி ரமேஷ் வீட்டில் கண்ணீர்..!
சென்னை: சமூக வலைதளங்களில் பிரபலமாகி சினிமாவில் கால்பதித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிஜிலி ரமேஷ் காலமான நிலையில், அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் பிரபல யூட்யூபர் விஜே சித்து. அப்போது யூட்யூப் சேனல்கள் அவரை பேட்டி எடுத்த நிலையில், கன்டெண்ட் தேடும் இடமா? இது எனக் கேட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ப்ளாக்ஷீப் யூட்யூப் சேனலின் விஜே சித்துவின் 'ஃபன் பண்றோம்" நிகழ்ச்சியில் ஒரே ஒரு வீடியோவில் தோன்றி பிரபலமாகி, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் நேற்று
காலமானார்.

ஆரம்பத்தில் கூலி வேலை பார்த்து வந்த பிஜிலி ரமேஷ், விஜே சித்துவின் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் சமூக வலைதளங்களில் பிரபலமானார். தொடர்ந்து பல யூட்யூப் சேனல்கள் அவரை பேட்டி எடுத்தன. அவரது பேச்சும் சைகையும் மீம் கன்டண்டுகளாக மாறியது.
தொடர்ந்து சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமானார் பிஜிலி ரமேஷ், அதற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் குடிப்பழக்கத்தால் அவரது உடல்நிலை மோசமானது. காலை மாலை இரவு என எந்நேரமும் குடித்துக்கொண்டே இருப்பேன்.. உடல்நிலை சரியாகவில்லை.. இப்பொழுது மரணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன் என ரமேஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கல்லீரல் மற்றும் கால் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்த பிஜிலி ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இருந்த போதும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதை அடுத்து தனது கணவரின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். அவரது பேட்டி வெளியான அடுத்த நாளே அதாவது நேற்று உயிரிழந்தார். இதை அடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து திரை உலகினரும் ரசிகர்களும் உறவினர்களும், பிஜிலி ரமேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜே சித்து நேரில் வந்து பிஜிலி ரமேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது யூட்யூப் சேனல்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி எடுத்தன. அப்போது ஒரு யூட்யூபர் காலையிலிருந்து கன்டண்ட் எதுவுமே கிடைக்கவில்லை.. ஏதாவது பேசுங்க என கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த விஜே சித்து,"கன்டண்ட் தேடும் இடமா இது? ரொம்ப தவறான விஷயம்? ஒருத்தர் வீட்டில் துக்கம் நடக்கும்போது.. நாம் கன்டண்ட் தேடக் கூடாது" என்றதோடு "பிஜிலி ரமேஷின் மரணத்தில் சொல்வதற்கு எதுவும் இல்லை குடிப்பழக்கம் காரணம் என்றாலும்.. அது நடக்கும் போது நடந்தே தீரும்.. என்னால் அவர் பிரபலமானார் என்று கிடையாது. அவரால் கூட நான் பிரபலமாக இருக்கலாம்.. துக்க வீடுகளில் இதுபோன்று செய்வது தவறு" என கூறினார்.
தற்போது அந்த வீடியோ வெளியாகும் நிலையில் சாவு வீட்டில் கூடவா கன்டெண்ட் தேடுவீர்கள் என யூடியூப் சேனல்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications