இந்தியாவிற்கு மிகப்பெரிய சிக்கலே இதுதான்.. மனித குலத்திற்கும் ஆபத்து.. எலான் மஸ்க் தந்த எச்சரிக்கை
சென்னை: பல்வேறு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இந்தியாவிற்கும் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மக்கள்தொகை சரிவுதான் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி உள்ளார்.

• ஜப்பான் 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகையில் மிகப்பெரிய மொத்த வீழ்ச்சியைக் கொண்டுள்ளது.
• பிறப்பு விகிதம் தேக்கமடைவதால் அமெரிக்கா நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.
• சீனாவின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை சரிந்து வருகிறது.
• சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
• இங்கிலாந்தில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
• இத்தாலியின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தது.
• உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கான அவல சாதனையை தென் கொரியா மீண்டும் மேற்கொண்டு உள்ளது.
மக்கள் தொகை சரிவு காரணமாக ஏற்படும் இந்த பாதிப்புதான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எச்சரிக்கை:
பல்வேறு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இந்தியாவிற்கும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி இந்தியாவில் 1.5 பில்லியன் மக்கள் தொகை 1 பில்லியன் ஆக குறையும். சீனாவில் 1.5 பில்லியன் மக்கள் தொகை 730 மில்லியனாக குறையும் என்று எச்சரித்து உள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவிற்கு இது பெரிய சிக்கலாக மாறலாம்.. அடுத்த 100 வருடங்களில் இது நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா எச்சரிக்கை;
உலகம் முழுக்க தற்போது ஏலியன்கள், யுஎப்ஓக்கள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்காவின் நாடாளுமன்ற விசாரணையில் யுஎப்ஓ இருப்பதாக வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டன. இன்னொரு பக்கம் ஏலியன் வருகை குறித்த அச்சங்களும் கூட எழுந்து உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காலநிலை மாற்றம். உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
மக்கள் தொகை: இது போக கொரோனா போன்ற வைரஸ்கள் காரணமாக உலகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட கொரோனாவின் புதிய வகை வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் துவங்கியது. இப்படி பல விஷயங்கள் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் உலகத்திற்கு அதை விட பெரிய ஆபத்து மக்கள் தொகைதான் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க தற்போது விண்வெளி பயணம் மீதான விருப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. விண்வெளி பயணம் என்பது ஆராய்ச்சிக்காக என்பது தாண்டி தற்போது சுற்றுலா, செவ்வாய் கிரக குடியேற்றம் என்ற அளவிற்கு நீண்டு உள்ளது. இதில் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஆராய்ச்சி செய்து வரும் நபர்தான் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர் இவர்தான்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications