"வயசுக்கோளாறு".. காட்டில் நடந்த அக்கப்போர்.. கதிகலங்கிய பெண்.. பரிதாப இளைஞர்.. திகிலில் திருப்போரூர்
திருப்போரூர் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
சென்னை: காதல் என்ற பெயரில் சிக்கி சீரழிந்ததுடன், உயிரே பறிபோன சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இதுக்கெல்லாம் காரணம், தங்கள் பிள்ளைகளை, சில பெற்றோர்கள் சரியாக கண்காணிப்பது கிடையாது என்கிறார்கள்.
திருப்போரூரை அடுத்துள்ளது மேலையூர்.. இங்கு வசித்து வருபவர் பிரவீன்குமார்.. 22 வயதாகிறது.. மறைமலைநகர் அருகே தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவர் ஒரு பெண்ணை ஸ்கூல் படிக்கும்போதிருந்தே காதலித்து வந்துள்ளார்.. அந்த பெண்ணும் இவரை விரும்பி உள்ளார்.. கல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் அந்த பெண்..

வயசு கோளாறு
ஒன்றாகவே ஸ்கூல் படித்து, ஒன்றாகவே காலேஜூம் படித்துள்ளார்கள்.. ஒரே கல்லூரியில் 2 பேருமே டிகிரி முடித்தார்கள்.. ஆனால், இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இவர்களின் காதலில் விரிசல் வந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. இதனால், தன்னை இனிமேல் சந்திக்க வரவேண்டாம் என்று, அந்த பெண் பிரவீன்குமாரிடம் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார், ஆத்திரப்பட்டுள்ளார்..

உல்லாசம்
என்னை காதலித்து விட்டு, இன்னொருவரை எப்படி கல்யாணம் செய்வாய்? என்று கேட்டுள்ளார்.. தன்னை தவிர, வேறு யாரையுமே திருமணம் செய்யக்கூடாது என்றும், கூறியுள்ளர்.. ஆனால், அதற்கு அந்த பெண் மறுத்துவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், வேறொருவரை நீ கல்யாணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தால் நாம் 2 பேரும் ஒன்றாக இருந்த நிர்வாண படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.. பிறகு, ஒருநாள் மட்டும் தன்னுடன், கடைசியாக உல்லாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லி காட்டுப்பகுதிக்கு அந்த பெண்ணை வரவழைத்துள்ளார்.

காட்டுப்பகுதி
கடைசியாக ஒருநாள் என்பதால் அந்த பெண்ணும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.. அங்கே இருவருமே ஜாலியாக இருந்துள்ளனர். ஆனால், பிரவீன்குமார் அதையும் போட்டோ, வீடியோ எடுத்துள்ளார்.. "நான் கூப்பிடும் போதெல்லாம் வரவேண்டும்" என்று சொல்லி, காதலியை மிரட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.. இதனால், பயந்துபோன அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து, தன்னுடைய அண்ணனிடம் சொல்லி அழுதுள்ளார்.. மேலும், தன்னுடைய போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.. இதற்கு நடுவில், அந்த பெண் காணாமல் போய்விட்டார். அதே நேரத்தில் பிரவீன்குமாரையும் காணவில்லை.

சிக்கல் சிக்னல்
இருவரும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால், பதறிப்போன அந்த பெண்ணின் பெற்றோர், காயார் போலீசில் மகளை காணவில்லை என்று புகார் தந்தனர்.. அப்போது பிரவீன்குமார் பற்றியும், நிர்வாண படங்களை வைத்து மிரட்டியது பற்றியும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்... இதையடுத்து, திருப்போரூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரவீன்குமாரையும், அப்பெண்ணையும் தேடி வந்தனர்.. இறுதியில், செல்போன் சிக்னலை வைத்து அந்த பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.. ஆனால், பிரவீன்குமார் மட்டும் கிடைக்கவில்லை என்பதால், தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடினர்.

காலிமனை பிணம்
இந்த சூழலில், வேறு ஒரு செல்போன் மூலம், காதலியை பெண்ணை தொடர்பு கொண்ட பிரவீன்குமார், "என்னை போலீசில் சிக்க வைத்து விட்டாயே.. உன்னை பழி வாங்குகிறேன் பார்" என்று சொல்லி, அந்த பெண்ணுடன் இருந்த நிர்வாண வீடியோ, போட்டோக்கள் எல்லாவற்றையும், வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டார்.. அந்த வீடியோ, போட்டோக்கள் எல்லாம், அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய பிரவீன்குமார், உடனே தற்கொலையும் செய்து கொண்டார்.. ஊருக்கு வெளியே இருந்து ஒரு காலி மனையில், விஷம் குடித்து அங்கேயே இறந்து விட்டார்.. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பிரவீன்குமாரின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்து, அவரது சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்..

வாட்சிங்
நடந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் சொல்லும்போது, "பள்ளியில் படிக்கும்போதே பெண் குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்துவிடுகிறார்கள்.. இதனால், பலருடன் தொடர்பு ஏற்பட்டு, இதுபோன்ற நபர்களுடன் புரியாமலே பழகிவிடுகிறார்கள்.. காதல் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டும் நபர்களிடம் அடிமையாகி சிக்கி கொள்கிறார்கள்.. அதனால், பெற்றோர்கள்தான், பள்ளி, கல்லூரி செல்லும் பெண் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications