சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதியின் கையடக்க சிலை... அன்பளிப்பாக தரும் ஸ்டாலின்.. திமுகவின் புது ஸ்டைல்

Google Oneindia Tamil News

சென்னை:சென்னையில் தம்மை சந்திக்க வருபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கையடக்க அளவிலான கருணாநிதியின் சிலையை அளித்து வருவது, அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக.. அரசியலில் மறைந்து போன தலைவர்களை மறக்காமல் இருக்க... சிலைகளை நிறுவுவது வழக்கம். உலக அரசியல் முதல்.. உள்ளூர் அரசியல் வரை இது பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் பிறந்த நாளன்று தலைவர்களை சந்திக்க வருபவர்கள் கொண்டு வரும் பரிசுப் பொருட்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

Portrait of karunanithi is being offered by stalin, those who met him in chennai

மறைந்த கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் ஏக பிரபலம். கோபாலாபுரத்தில் உள்ள இல்லத்தில் தொண்டர்களை சந்திக்கும் அவர்.. ஒவ்வொருக்கும் 10 ரூபாய் தாள்களை அன்பளிப்பாக வழங்குவார்.

அதனை பெறுபவதற்காகவும்... வாழ்த்து சொல்லவும் ஒவ்வொரு திமுக தொண்டரும் தவறாது சென்று வருவர். அதே போன்று திமுகவில் அமைச்சர்களாக இருந்த பலரும் புத்தகங்களை விரும்பி படிப்பது உண்டு. இதுபோன்ற புத்தகங்கள் கலைஞர் கருவூலத்தில் வைக்கப்படும்.

Portrait of karunanithi is being offered by stalin, those who met him in chennai

சிலைகளை தாங்கிய அரசியல் என்பது தமிழகத்தில் ஏக பிரபலம். மறைந்த ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்ட சிலை, அறிவாலயத்தில் கருணாநிதிக்கு வைக்கப்பட்ட சிலை... இரண்டுமே சமகால அரசியலில் பல்வேறு எதிர்மறையான கருத்துகளை எதிரொலித்தன.

தற்போது கருணாநிதி இல்லாத திமுகவை சுமந்து செல்லும் ஸ்டாலின் தம்மை சந்திக்க வருபவர்களுக்கு அவரது நினைவை போற்றும் வகையில் கருணாநிதியின் கையடக்க சிலையை நினைவுப் பரிசாக வழங்கி வருகிறார். சென்னையில் இருக்கும் போது தம்மை சந்திக்க வருபவர்களுக்கு மறக்காமல் அதை கொடுத்து அனுப்புகிறார்.

சென்னையில் ஸ்டாலினை டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி சந்தித்து பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் சென்ற அவர், பொன்னாடை போர்த்தியும், பொக்கே கொடுத்தும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஸ்டாலின் அவருக்கு கருணாநிதி சிலையை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். தற்போது இணையத்தில் அந்த புகைப்படம் ஹைலைட்.

English summary
Portrait of Karunanithi is being offered by Stalin, those who met him in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X