பொள பொளன்னு பொளக்கப்போகுது மழை.. 13 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது! செப்டம்பர் 1 வரை குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
31.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
01.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.09.2023 முதல் 04.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோடம்பாக்கம் (சென்னை) 7, வானகரம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 6, சென்னை நுங்கம்பாக்கம், புழல் ARG (திருவள்ளூர்) தலா 5, டிஜிபி அலுவலகம் (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), கொளத்தூர் (சென்னை), மலர் காலனி (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), பூந்தமல்லி ARG ( திருவள்ளூர்), ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை) தலா 4, கொளச்சல் (கன்னியாகுமரி), சோழிங்கநல்லூர் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), பாலர் அணைக்கட்டு (ராணிப்பேட்டை), தேனாம்பேட்டை (சென்னை), மதுரவாயல் (சென்னை), மணலி (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), தண்டையார்பேட்டை (சென்னை), ஆற்காடு (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, மணப்பாறை (திருச்சி) தலா 3, இரணியல் (கன்னியாகுமரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, கொரட்டூர் (திருவள்ளூர்), பெரியார் (தேனி), சோழவரம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), திரூர் Kvk Aws (திருவள்ளூர்), துறையூர் (திருச்சி) தலா 2, செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஏழுமலை (மதுரை), பாலமோர் (கன்னியாகுமரி), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), திருவள்ளூர், குடியாத்தம் (வேலூர்), கலவாய் பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 29.08.2023 மற்றும் 30.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 29.08.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31.08.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.09.2023 மற்றும் 02.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications