போஸ்ட் ஆபீஸில் ரூ.333 தினமும் போட்டாலே 17 லட்சம் அள்ளலாம்! RD தபால் அலுவலக சேமிப்பு திட்டம்! சூப்பர்
சென்னை: நாம் பாடுபட்டு உழைக்கும் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்வதன் மூலம், நல்ல பலனை பிற்காலத்தில் அடைய முடியும்... மிகப்பெரிய பலனை ஈட்ட முடியும்... அப்படியொரு உத்திரவாதமான லாபத்தை தரக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை, அஞ்சலகங்கள் செயல்படுத்துகின்றன. அதில், முக்கியமானதும், மிகவும் பிரபலமாகவும் இருப்பது தொடர்வைப்புத் திட்டம் (Recurring Deposit - RD). இந்த அற்புதமான சேமிப்பு திட்டத்தின் பலன்கள், சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்,.
தற்போதைய சூழலில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது போதவில்லை.. அதனால்தான், வருங்கால எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பலரும், சேமிப்பை கையில் எடுக்கிறார்கள்.. இந்த சேமிப்பு திட்டங்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது..

சிறுசேமிப்பு திட்டங்கள்
ஏனென்றால் தபால் நிலையத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் எப்போதுமே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பவை. குறைந்த முதலீட்டில் இந்த சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கலாம். நிதி பாதுகாப்பும், அரசின் உத்தரவும் உள்ளது. வட்டியும் கணிசமாக பெற முடிகிறது..
அந்தவகையில், தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) திட்டம் குறித்து பார்ப்போம்.. போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத் திட்டம் (RD) அதாவது ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும்.. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து கடைசியில் வட்டியுடன் பெரிய தொகையை பெற முடியும்.. இது ஒரு வகையான சேமிப்பு திட்டமாகும்.
பல பிளஸ் பாயிண்ட்கள்
வெறும் ரூ.100-ல் தொடங்கலாம் என்பதே இந்த திட்டத்தின் பிளஸ் பாயிண்ட்டாகும்.. தினமும் சேமிக்க ஆரம்பித்தாலே, அது வருங்காலத்தில் ஒரு பெரிய தொகையாக மாறுகிறது என்பதால், ஏராளமானோரின் கவனத்தை இந்த திட்டம் ஈர்த்து வருகிறது..
இதில் ஒரு நாளைக்கு ரூ.333 சேமித்தால் 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம், அதே நேரத்தில் அரசு வழங்கும் 6.70% வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.17,08,546 வரை கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
சேமிப்பு சூப்பர் திட்டம்
ஒருவர்தான் தினமும் ரூ.333 சேமிக்க ஆரம்பித்தால், அது மாதம் ரூ.10,000 ஆகும். இந்த மாதாந்திர சேமிப்பை ஐந்து வருடம் தொடர்ந்தால், மொத்தமாக ரூ.6 லட்சம் சேரும். இந்த தொகைக்கு அரசு தரும் 6.70% வட்டியும் சேரும். அதனால் ஐந்து வருடத்தில் மட்டும் வட்டி ரூ.1.13 லட்சம் வரைக்கும் கிடைக்கும்.
இந்த சேமிப்பை ஐந்து வருடத்தை தாண்டி, 10 வருடம் வரை வைத்திருந்தால், மொத்த சேமிப்பு 12 லட்சத்தை தாண்டும். அதற்கு மேலாக வட்டி மட்டும் சுமார் ரூ.5,08,546 வரும். இதனால், 10 ஆண்டுகளின் முடிவில் சேரும் மொத்த தொகை கிட்டத்தட்ட ரூ.17,08,546 ஆகும். இதுதான் இந்தத் திட்டத்தின் அடுத்த பிளஸ் பாயிண்ட்டாகும்.
சொளையா ரூ.11 லட்சம்
அதேபோல், ஒரு நாளைக்கு ரூ.222 சேமிக்க முடிந்தால் மாதம் ரூ.6,660, அதாவது 5 ஆண்டுகளில் ரூ.3,99,600 வைப்பு, வட்டியுடன் ரூ.4,75,297 ஆக அதிகரிக்கிறது. இதை இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், மொத்த வைப்பு ரூ.7,99,200, 10 வருடங்களின் முடிவில் கிட்டத்தட்ட ரூ.11,37,891 வரை கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் இன்னொரு வசதி என்னவென்றால், கணக்கை ஒரு வருஷத்துக்கு தொடர்ந்து வைத்திருந்தால், டெபாசிட் செய்த தொகையின் 50% வரை கடனை பெற முடியும். இந்தக் கடனுக்கு கூடுதலாக வெறும் 2% வட்டியே வசூலிக்கப்படும்.
RD தபால் அலுவலக சேமிப்பு திட்டம்
ஒருவேளை அவசர தேவையெனில் கணக்கை மூடுவதற்கும் அனுமதி உள்ளது. ஒரே நபரின் பெயரில் மட்டும் அல்லாமல், குழந்தைகளுக்கோ, மூத்த குடிமக்களுக்கோ அல்லது பெற்றோர், குழந்தைகள் சேர்ந்தும் ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவும் வைத்து கொள்ளலாம்.
ஆனால், மாதாந்திர தொகையை நேரத்திற்கு டெபாசிட் செய்வது கட்டாயம். ஒரு தவணை மிஸ் ஆகிவிட்டால், மாதத்திற்கு 1% அபராதம் கட்ட வேண்டும். தொடர்ந்து 4 தவணைகள் தவறினால் கணக்கு தானாகவே மூடப்பட்டுவிடும்..
5 வருட காலத்திற்கான இந்த RD திட்டத்தை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கும் வசதியும் இதில் உண்டு.. மொத்தத்தில் குறைந்த தொகையிலிருந்து பெரிய சேமிப்பை உருவாக்கும் பாதுகாப்பான வழி என்பதாலேயே, இந்த தபால் நிலைய RD திட்டம் இன்று பலருக்கு நம்பிக்கையான வருங்கால சேமிப்பாக திகழ்ந்து கொண்டிருக்கிறது...!!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications