Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்ட பயன்கள்.. அஞ்சலக திட்டங்கள் அவசியம்.. வருமானம், வட்டி... செம மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காகவும், சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காகவே அஞ்சல் நிலையங்களும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கும் நாளுக்கு நாள் ஆதரவுகள் கூடியபடியே உள்ளது.. அந்தவகையில், ஒருசில திட்டங்களை பற்றியும், அந்த திட்டங்களின் பலன்களை பற்றியும் இங்கு பார்ப்போம்.

அஞ்சல் திட்டங்களை பொதுமக்கள் நாடிச்செல்ல காரணங்கள் உள்ளன.. ஒரு வங்கியில் அக்கவுண்ட்வை வைத்திருப்பதை போலவே, போஸ்ட் ஆபீஸ்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். அரசுக்கு சொந்தமானவை என்பதால், தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளில் சிறந்த வருமானம் கிடைக்கிறது..

Post Office Savings schemes central Government

பாடுபட்டு உழைத்த பணத்தை முதலீடு செய்யும்போது, பணத்துக்கான உத்தரவாதமும், பாதுகாப்பும், பணப்பலனும், வட்டி விகிதமும், ஓய்வூதிய பலனும் என அத்தனையும் பலமடங்காக திரும்ப கிடைக்கிறது..

அந்தவகையில், தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற 9 வகையான திட்டங்கள் அமலில் உள்ளன.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்

இதில் (Mahila Samman Savings Certificate) மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் எனப்படும் "பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" திட்டமானது, பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துவங்கப்பட்டதாகும்.. 3 மாதத்துக்கொருமுறை வட்டி, கணக்கில் வரவு வைக்கப்படும். டெபாசிட் தொகை, முதலீடு செய்த தேதியிலிருந்து 2 வருடம் கழித்து முதிர்வடையும். இந்த கணக்கை துவங்க பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.. அதிகபட்சமாக ரூ. 2,0000 லட்சம் முதலீடு செய்யலாம்.

Senior Citizen Saving Scheme என்று சொல்லக்கூடிய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்ற திட்டமானது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குரியது. விருப்ப ஓய்வு பெற்றவர்களும், சூப்பர் ஆனுவேஷன், சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்டவர்களும் இந்த திட்டத்தில் இணையலாம்.

1 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் என்றால், காசோலை மூலம் அக்கவுண்ட்டை துவங்க முடியும். அதிகபட்சமாக ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம். இதில் இணைந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு வைப்புத் தொகை முதிர்ச்சியடைகிறது.. ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம்

செல்வ மகள் சேமிப்பு

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற திட்டமானது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துவங்கப்பட்டதாகும். செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்ற இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.. ரூ.250 செலுத்தி கணக்கை துவங்கலாம். அதிகபட்சமாக ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.

Fixed deposit என்று சொல்லக்கூடிய நிலையான வைப்பு தொகை திட்டமானது, வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது..

கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்

அதேபோல, அஞ்சல் அலுவலகத்தின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுவது கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டமாகும்.. இந்த கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமானது, கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் உதவுவதற்காகவும், அவர்களது காப்பீடு அறிவை வளர்ப்பதற்கும் துவங்கப்பட்ட திட்டமாகும். தினந்தோறும் ரூ.50 வீதம், மாதத்துக்கு ரூ.1500 வரை முதலீடு செய்ய வேண்டும்.. இதனால், மெச்சூரிட்டி பணமாக 35 லட்சம் வரை எளிதாக பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+